பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - - o *~ - -44 கண்டறியாதன கண்டே.ை

மூன்று பேர்களே இருந்த சிறிய கடை அது. கருத்திருமன் தமக்கு வேண்டிய மருந்தைப் பற்றி விசாரித்தார். கடைக்காரர் அந்த மருந்தை எடுத்துத் தந்தார். நானும், அன்பர் கணேசனும், தம்பியும், மற்ற மாணவரும் ஒவ்வோர் இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அன்பர் கருத்திருமன் தமக்கு வேண்டிய மருந்தை வாங்கிக்கொண்டு அதன் விலையைக் கொடுத்தார். யாவரும் வெளியே வந்தோம். எதிர்ப்புறத்தில் ஒரு மூலையில் தம்பி காரை நிறுத்தியிருந்தார். நடைபாதையில் சிறிது கடந்து சென்று சாலையைத் தாண்டி மறு பக்கம் சென்று காரில் ஏற வேண்டும். நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.

அப்போது கடந்ததை என்னவென்று சொல்வேன்! எங்கள் பின்னல் தம்பியும் மற்ருெரு மாணவரும் கடந்து வந்துகொண்டிருந்தார்கள். அந்த மாணவர் தம் பையி லிருந்து முகமயிர் களையும்போது முகத்திற் பூசிக்கொள்ளும் மெழுகுள்ள (Shaving Cream) காகிதப் பொதியை எடுத்துத் தம்பிக்குக் காட்டிக்கொண்டிருந்தார். அதே சமயத்தில் மருந்துக் கடையிலிருந்து வேகமாக ஒருவர் வந்தார். ஆள் கடோற்கசன் மாதிரி இருந்தார். வந்தவர் அந்த மாணவன் தலையில் பேய்போல அடித்தார்: கன்னத்தில் ஓங்கி ஒர் அறை அறைந்தார்: கையிலுள்ளதைப் பிடுங்கிக்கொண்டு, "போலீஸுக்கு வா!' என்று பிரெஞ்சில் உறுமினர். அந்தப் பையன் பல்லே இளித்தான்; திருதிருவென்று விழித்தான்; எடுத்தான் ஒட்டம். அவன் அந்தக் கிரீமைத் திருடிப் பையில் போட்டுக்கொண்டு வந்திருக்கிருன்!

என் கதி கலங்கியது. அது சாமானியமான அடி அன்று மற்ருெருவகை இருந்தால் அங்கேயே சுருண்டு விழுந்திருப்பான். அவன் ஓடி விட்டான்.

எங்கள் கெஞ்சில் அவமான உணர்ச்சி எழுந்தது. அயாரோ பையன் திருடினன் என்ரு எண்ணுவார் அந்த