பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கண்டறியாதன கண்டேன்

உயிரைத் தியாகம் செய்தவர்களின் குன்றம் என்று (Mart des Martyrs) முன்பு வழங்கி, நாளடைவில் மாண்ட்மார் என்று மாறியதாம். பாரிஸ் மாநகரத்தில் முதல் பிஷப்பாக இருந்தவர் டெனிஸ் சாமியார் என்பவர் (Saint Denis). அவரையும் அவரோடு சேர்ந்த 250 பேர்களேயும் இங்கே

கொன்றுவிட்டார்களாம்! அந்தச் சாமியாரையும் அவ. ருடன் இருந்த வேறு இருவரையும் முதலில் பலவிதமாக, ஊருக்குள் சித்திரவதை செய்தார்களாம். பிறகு அவர்களே மலைமேல் அழைத்துக்கொண்டு சென்ருர்களாம். அந்தத்

துறவிகள் சிறிதும் கலக்கமின்றி இறைவன் திருவருளே எண்ணித் தெளிந்த முகத்துடன் போனர்கள். 'என்னடா, இந்த ஆசாமிகள் சித்திரவதை செய்தும் கல்லுக்குண்டைப் போலக் கலங்காமல் இருக்கிருர்களே! என்று அவர்கள்

தலையைத் தறிக்க அழைத்துச் சென்றவர்களுக்கு ஆச்சரிய ut}{τ&s தேது; அதோடு, 'இவர்களே நம்மால் நடுங்க. ஒளிக்க முடியவில்லையே' என்று எரிச்சலும் வந்தது. உடனே ஒரிடத்தில் மூவர் தலையையும் தறித்துவிட்டார்கள் பாவிகள்!

அப்போது ஒர் அற்புதம் நிகழ்ந்ததாம். தலையில்லாத டெனிஸ் சாமியார், தம்முடைய தலையை எடுத்துக் கொண்டே குன்றத்தின் உச்சிக்கு நடந்தார். போகும் வழியில் ஒரு சுனேயில் இரத்தம் படிந்த முகத்தைக் கழுவிக் கொண்டார். பிறகு நான்கு மைல் நடந்து சென்று விழுந்து இறந்து போரைாம்.

இத்தகைய கதைகள் எல்லா நாடுகளிலும் வழங்கு. கின்றன. நம்முடைய காட்டில்தான் ஞானிகளையும் சாமியார் களையும் பற்றிப் பல பல அதிசய நிகழ்ச்சிகளைச் சொல்லு, கிருர்கள் என்று கினைக்க வேண்டாம். உலகம் முழுவதும் அங்கங்கே உள்ள ஞானிகளைப்பற்றி இத்தகைய கதைகள் உலாவுகின்றன. மனித ஜாதியின் எண்ணங்களிலும் நம்பிக்கைகளிலும் ஒரு பொதுமை உலகமெங்கும் இருக்கிறது.