பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகம், யோகம், வேகம்! '49

டெனிஸ் சாமியார் வெட்டப்பட்ட தம் தலையை எடு த்துச் சென்ருர் என்ற கதையைக் கேட்டபோது எனக்குக் கலிங்கத்துப்பரணிப் பாட்டு ஒன்று கினேவுக்கு வந்தது.

"அடிக்கழுத்தி ளுெடும் சிரத்தை

அரிவ ராலோ அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ.'

தாமே தம்முடைய சிரத்தை அரிந்து அதைத் தம் கையிலே எடுத்துக் காளியின் கையில் கொடுப்பார்களாம்!

இந்தக் குன்றைச் சுற்றி அருமையான பசுமைக் காட்சி பரவியிருக்கிறது; மரங்களும் பூம்பொழில்களும் அழகாகக் காட்சி அளிக்கின்றன. இந்தச் சர்ச்சின் வாயிலிலிருந்து பார்த்தால் பாரிஸ் மாநகரம் முழுவதும் தெரிகிறது. இந்த இடம் எபீன் கதியின் நீர் மட்டத்திலிருந்து 328 அடி உயரத்தில் இருக்கிறது.

பிரான்சிலுள்ள கக்தோலிக்கர்கள் ஒன்றுகூடி இங்கே இந்தத் திருக்கோயிலே எழுப்ப வேண்டுமென்று 1871 ஆம் ஆண்டு வாக்கில் தீர்மானித்தார்கள். நாடாளுமன்றம் அந்தக் கருத்தை ஏற்று ஆவன செய்ய முன்வந்தது. அபடி என்ற பெரிய சிற்பி இந்தக் கோயிலுக்கு வரைபடம் எழுதித் தந்தார். அப்பால் 1876ஆம் ஆண்டில் கோயிலைக் கட்டத் தொடங்கினர்கள். அஸ்திவாரம் மட்டும் போட்டுமுடிந்தது. 1884ஆம் ஆண்டில் அந்தச் சிற்பி காலமானர். பிறகு பலவேறு சிற்பிகள் திருக்கோயில் கட்டும் பணியில் ஈடு பட்டார்கள். 1919ஆம் ஆண்டில் கோயில் கட்டி முடிந்தது: வழிபாட்டுக்கு உரியதாயிற்று. நான்கு கோடி பிராங்குகள் கோயில் கட்டச் செலவழிந்தனவாம். அவ்வளவு பணத்தை யும் கத்தோலிக்கப் பக்தர்களே வழங்கினர்கள்.

இந்தத் திருக்கோயிலில் பல அரிய சிற்பங்கள் இருக் கின்றன. கிறிஸ்துநாதருடைய புடைப்புச் சிற்பம் ஒரு

கண்டறி.-4