பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கண்டறியாதன கண்டேன்

அங்கெல்லாம் கார்கள் போகிற வேகம் நமக்கு அச்சத். தைத் தரும். இடையிடையே மக்கள் குறுக்கே கடக்கும் இடங்கள் இருக்கின்றன. பச்சை விளக்கைப் போட்டால் தான் அவர்கள் இறங்கிச் சாலைக்குக் குறுக்கே போகிருர்கள். இயற்கையாகவே இந்த ஒழுங்கு அவர் களிடம் படிந்திருக்கிறது.

இந்த நெரிசலில் சாலைகளில் விபத்து நடப்பதில்லையோ என்று விசாரித்தேன். கடப்பதுண்டாம்; ஆனல் அதைப் பெரிது படுத்துவதில்லையாம். நம்முடைய ஊராக இருக் தால் எங்காவது விபத்து கடந்தால் அங்கே கூட்டம் கூடி விடும். மோதிக்கொண்ட கார்கள் அப்படி அப்படியே மணிக் கணக்கில் கின்றுவிடும். கோட்டை கட்டணுற்போலச் சாக்கட்டியால் சுற்றிக் கோடிழுத்து கிறுத்திவிடுவார்கள். எவ்வளவு நேரம் ஆகும், விடிமோட்சம் பிறக்க என்று. தெரியாது. -

அன்பர் தம்பி தம் காரை வேகமாக ஒட்டினர். வரிசை வரிசையாகக் கார்கள் ஒடிச்கொண்டிருக்கும்போது ஒரு கார் மட்டும் கிதானமாகப் போக முடியுமா? போய்க் கொண் டிருக்கம்போதே திடீரென்று கார் கின்றது. முன் கின்ற. காரோடு சிறிதுமோதியது.காரணம் அந்தக்கார்திடிரென்று. கின்றுவிட்டதுதான். அது அதற்கு முன் சென்ற காரில் கொஞ்சம் பலமாக மோதிவிட்டது. அதற்குக் காரணம் முன் போன கார் கின்றதுதான். அதற்குக் காரணம் விசாரித்தால் தொடர்ந்து இப்படியே இருக்குமோ என்னவோ! நல்ல வேளே! நாங்கள் சென்ற காருக்கு ஒரு சேதமும் இல்லை. தம்பி கீழே இறங்கிப் பார்த்தார். "ஒன்றும் இல்லை” என்று சொல்லி, இரண்டு நிமிஷத்தில் முன் கார் புறப்பட்டு வேகமாகச் செல்ல, இவரும் பின் தொடர்ந்தார். கார்க்காரர்கள் கூச்சல் எழுப்பவில்லை; போலீஸ்காரன் வந்து மிரட்டவில்லை. ஆளோடு ஆள் சிறிது மோதில்ை எப்படி இருக்குமோ, அதுபோல ஒன்றும் குழப்பம் இல்லாமல் கார்கள் போய்விட்டன.