பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகம், யோகம், வேகம்! . 57

அவர் எங்களைப் பாதாள ரெயிலாகிய மெத்ரோ {Metro)வில் அழைத்துக்கொண்டு சென்ருர், மின்சார ரெயில்பாதைகள் யாவும் நகரத்தில் பூமிக்கு அடியில்தான் இருக்கின்றன. ரெயில்கள் படுவேகமாகப் போகின்றன. ஒவ்வொரு ரெயில் கிலேயமும் அழகாக இருக்கின்றது. எங்கும் ஒளிமயம், வண்ண ஜாலம், விளம்பரங்கள். விளம் பரங்களா அவை: எல்லாம் கண்ணேக் கவரும் ஒவியங்கள். பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் என்ற ஸ்டேஷனில் வண்ணக் கண்ணுடிகளில் வரைந்த அற்புத ஒவியங்களேக் காணலாம்:

அவை விளம்பரங்கள் அல்ல; அழகான ஓவியக் காட்சி.

ஒவ்வொரு கிலேயத்திலும் ஏறி இறங்க இயங்கும் படிகள் (Escalator) உள்ளன. நாம் ஏறினலும் இறங் கிலுைம் முன்னே உள்ள சமதரை போன்ற இரும்புத் தளத்தில் கால் வைக்க வேண்டியதுதான்; அடுத்தகணம் உங்களே அது இழுத்துச் செல்லும். அதுவே படியாக மாறி மடிந்து கீழே இறங்கும், மேலே போகும். கடக்க வேண்டிய தளம் வந்ததும் அது மறுபடியும் சமதளமாகி விடும். நாம் எட்டி ஓர் அடி எடுத்து கிரந்தரமான தரையில் கடக்க வேண்டியதுதான்.

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பாதையின் போக்கையும் ஸ்டேஷன்களேயும் காட்டும் படம் (Map) இருக்கிறது. ரெயில் சாலேயினிடையே உள்ள ஸ்டேஷன்கள் பல்புகளால் காட்டப் பெற்றிருக்கின்றன. நாம் எந்த கிலேயத்துக்குப் போக வேண்டுமோ அதற்குரிய பொத்தானை அமுக்கினால், உடனே எந்தப் பாதையில் போக வேண்டுமோ அந்தப் பாதையிலுள்ள பல்புகள் ஒளிவிடும். இன்ன ஜங்ஷனில் இறங்கி இப்படிப் போகவேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். . . -

ஒரு டிக்கெட் விலை 1 பிராங்க் 10 சதம். அதை வாங்கிக் கொண்டால் எந்த ஸ்டேஷனுக்கும் போகலாம்; எத்தனை முறை வெண்டுமானலும் போகலாம்; ஆனால் ஒருமுறை வெளியே வந்துவிட்டால் அந்த டிக்கெட் செல்லாது. பத்து