பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கண்டறியாதன கண்டேன்

டிக்கெட்டுக்களாக வாங்கினல் 7 பிராங்க் கொடுத்தால், போதும். யார் வேண்டுமானலும், எப்போது வேண்டு. மானலும் உபயோகித்துக் கொள்ளலாம். இதே டிக்கெட்டை வைத்துக்கொண்டு பஸ்ஸிலும் போகலாம்.

வண்டி வந்தால் பிளாட்பாரத்துக்குள் புகும் கேட்” தானே மூடிக்கொள்ளும். வண்டி புறப்பட்ட பிறகே திறக்கும். அதனால் வண்டியைப் பிடிக்க அவசர அவசரமாக ஓடுவதும், பிளாட்பாரத்தில் முண்டியடித்துக்கொண்டு. புகுவதும் அங்கே இல்லை. வண்டி பிளாட்பாரத்தில் கின்றதும் அதன் கதவுகள் தாமே திறக்கும்; நகர்ந்தவுடன் தாமே மூடிக்கொள்ளும். வண்டி ஓடும்போது ஏறி நுழைய, முடியாது. வண்டிக்குள் ஆசனங்கள் மிக்வும் செளகரிய, மாக உள்ளன.

கம் ஊர்களில் சில வியாபாரிகள், 'அஞ்சு ரூபாய்க்குப் பத்துச் சாமான்கள்' என்று விற்கிருர்களே, அது போன்ற வியாபாரம் அங்கும் ரெயில் கிலேயங்களில் நடக்கிறது. ஓரிடத்தில் ஒருவன் பத்துச் சாமான்களைப் பத்துப் பிராங்குக்கு விற்ருன். அவன் பண்டங்களின் பெயரைச் சொல்லும் வேகம், ஏதோ கிராமபோனில் கேட்பதுபோல: இருந்தது. பே,ை கலர் பென்சில், பர்ஸுகள்-இப்படிப் பத்துச் சாமான்களை ஒரு பையில் போட்டுக் கொடுத்தான். அவன் சொல்லுகிற வேகமும் ஜனங்கள் வாங்குகிற, வேகமும் அவன் பணம் பண்ணுகிற வேகமும் மின் வேகத்தில் இருந்தன. அப்படி அங்கே விற்பது அநுமதி பெருத காரியம். ஆனல் என்ன? அவனை யாராவது பிடிக்க வந்தால் கண்மூடிக் கண் திறப்பதற்குள் அவன் கடையைக்

சட்டிக்கொண்டு மாயமாய் மறைந்து விடுகிருன்.

எங்களுக்குப் பழக்கமாகிப் போன லக்ஸம்பர்க் ஸ்டேஷனுக்கு வந்து மேலே ஏறி இருப்பிடம் போய்ச் சேர்ந்தோம்.