பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அரங்கில் தமிழ் '61

திலிருந்தும் ஜர்மனியிலிருந்தும் ஸ்வீடனிலிருந்தும் ஸ்விட் ஜர்லாந்திலிருந்தும் ஜப்பானிலிருந்தும் வந்த அறிஞர்கள் அமர்ந்திருந்தார்கள், அவர்கள் தமிழைத் தமிழின்மேல் உள்ள காதலால் விரும்பிப் படித்தவர்கள், அவர்களோடு மலேசியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் தமிழ் காட்டி. லிருந்தும் வந்திருந்த தமிழர்கள் அமர்ந்திருந்தார்கள்.

பதிவு செய்யப்பெற்ற தேவாரப் பாடலின் மெல்லிய, இனிய இசை அங்கே மிதந்து வந்தது. மாதர்ப் பிறைக் கண்ணி யான மலையான் மகளொடும் பாடிப் - போதொடு நீர்சுமக் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்.யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்றபோது-காதல் மடப்பிடியோடும். களிறு வருவன கண்டேன்-கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறி யாதன கண்டேன்' என்ற அப்பருடைய திருவாக்குத் தெளிவாகக் கேட்டது. 'கண்டறியாதன கண்டேன்!” என்று திருநாவுக்கரசர் வியந்து கண்ட காட்சி வேறு. அந்த அரங்கிலே கண்ட அற்புதக் காட்சியைக் கண்டு வியந்து இருந்த நானும் அதே தொடரைத்தான் மீட்டும் மீட்டும் எண்ணிப் பார்த்தேன். கண்டறியாதன கண்டேன்!' என்று நான் சொல்வதற்கு ஏற்ற காட்சிகளே என் பயணத்தில் கண்டுகொண்டுதானே வருகிறேன்?

சரியாகப் பத்து மணிக்குக் கருத்தரங்கு தொடங்க இருந்தது. இந்த அரங்கைக் கூட்டுவதற்காக இரண்டு மாத காலத்துக்கு மேலாக அல்லும் பகலும் உழைத்த பேராசிரியர் தனிநாயக அடிகள், கிகழ்ச்சிகளே எவ்வெவ் வாறு நடத்த வேண்டும் என்று பம்பரமாகச் சுழன்று எல் லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார், விழாகன்ருக நடைபெற வேண்டுமே என்று கவலை அவருக்கு. இந்தக் கருத்தரங்கு நடைபெறுவதற்கு ஜீவகாடியாக இருந்த டாக்டர் ழான் பிலியோஸா அங்கே இருந்தார், அவரும் அவ்வப்போது வேண்டியவற்றைக் கவனித்துக்கொண் டிருந்தார்.