பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கண்ட்றியாதன கண்டேன்.

இயக்குநராக இருந்தவர் டாக்டர் மால்கம் ஆதிசேவுையா, அவர் இந்தக் கருத்தரங்கு நடத்துவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். இவர்களுடைய முயற்சியால் மூன்ருவது உலகத்தமிழ்க் கருத்தரங்கு நான்கு நாட்கள் பாரிஸ் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழே வழங்காத ஒரிடத்தில் தமிழை ஆராய்ச்சி செய்யும் பல நாட்டு அறிஞர்கள் கூடிப் பலபல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தார்கள். தமிழைப்பற்றிய கருத்துக் களைப் பரிமாறிக்கொண்டார்கள். இது தமிழ் மக்கள் பெருமிதப்பட வேண்டிய நிகழ்ச்சி. படித்த கட்டுரைகளில் தவறு இருக்கலாம். அதனல் ஆராய்ச்சியாளர்களுடைய தகுதியையோ அன்பையோ குறைத்து மதிக்கக்கூடாது. முடிந்த முடிபென்பது ஆராய்ச்சியில் எளிதில் காண முடியாதது. ஒருவர் ஒரு கருத்தைத் தமக்குத் தெரிந்த ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னல் அதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனல் அந்த மறுப்பு, ஆராய்ச்சி முறையில் ஆதாரங்களுடன் இருக்க வேண்டும். வெறும் உணர்ச்சியில் எழுந்ததாக இருக்கக்கூடாது. :

தமிழ் இலக்கியங்களைப்பற்றியும் தம்ழ்மொழியைப் பற்றியும் தமிழர் பழக்கவழக்கங்களைப்பற்றியும் தமக்குள்ள அன்பு காரணமாக ஆராய்ந்து அவற்றைப்பற்றி எழுதியும் பேசியும் ஈடுபடும் அறிஞர்கள் உலகில் பல நாடுகளில் இருக்கிருர்கள் என்பதை இந்தக் கருத்தரங்கு தெளிவாக் கியது. முன்பெல்லாம் இந்திய இலக்கிய சம்பந்தமான ஆராய்ச்சி எங்கே கடந்தாலும் அது வடமொழியைப் பற்றியதாகவே இருக்கும், கீழை நாட்டுக்கலை மகாநாடு எங்கே கடந்தாலும் அறிஞர்கள் வடமொழி நூல்களைப் பற்றியே தம் ஆராய்ச்சிகளே நடத்தினர்கள். ஆனல் பழமையும் வளமும் கொண்ட மற்ருேர் இந்திய மொழி' யாகிய தமிழைப்பற்றி உலகம் தெரிந்துகொள்ளாமல் இருந்தது நமக்குக் குறையாகவே பட்டது. காலம் மாறியது, இந்திய மொழிகளில் ஹிந்தி, வங்காளி, தெலுங்கு, தமிழ்,