பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அரங்கில் தமிழ் 69

ஆகிய மொழிகளையும் பிற நாட்டு அறிஞர்கள் ஆராயத் தலைப்பட்டனர். பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங் களில் இந்தியமொழிகளைப் பயிற்றுபவர்களும் பயிலுகிறவர் களும் ஆராய்ச்சி செய்கிறவர்களும் தோன்றினர்கள்: அமெரிக்காவில் அநேகமாக எல்லாப் பல்கலைக் கழகங் களிலும் பலர் இந்திய மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக் கிருர்கள். -

இருந்தாலும் வடமொழியையன்றி மற்ற மொழி களுக்காக உலக மகாநாடும், உலக ஆராய்ச்சிக் கருத் தரங்கும் நடைபெறவில்லை, இப்போது தமிழ் மொழிக்காக உலகத்தில் வெவ்வேறு நாட்டிலுள்ள அறிஞர்கள் கூடி உலகக் கருத்தரங்கை மேல்நாட்டில், நாகரிகமும் கலையும் தாண்டவமாடும் பாரிஸ் மாநகரில், நடத்தினர்கள் என்பது நாம் மிகவும் பெருமைப்படக் கூடியது அல்லவா? இதைக் கூட்டினவர்களைத் தமிழ் மக்கள் நன்றியறிவோடு பாராட்ட வேண்டும். தமிழன்னையின் எழிலை உலகமே கண்டு மகிழ்கிறது. பல அறிஞர்கள் தமிழ் நூல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பல அரிய உண்மைகளைக் கண்டு வருகிருர்கள் என்ற எண்ணம் தோன்றும்போது நாம் பூரிப்படைய கியாயம் உண்டு.