பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கண்டறியாதன கண்டேன்

4. இந்தியப் பெருங்கடல் மூலம் நடத்தப்பட்ட வாணி பத்தைப் பற்றிய ஆராய்ச்சி, கிழக்கு ஆப்பிரிக்காவின் சரித் திரத்துக்கான மூலாதாரங்களில் ஒன்ருக இருத்தல்.”

தமிழரின் பரந்த மனப்பான்மையைச் சிறப்பாகப் பாராட்டினர். 'விரிந்து பரந்த இந்த ஆதிக்கத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது, அதன் பூரண சமாதான இயல்பு ஆகும். அநேகமாக, சரித்திரத்தில் வேறு எந்த ாாகரிகமும் கத்தியின்றி, இரத்தமின்றி, முழுமையும் வாணிபம், கலாசாரம் இவை மூலமாகவே தனது செல்வாக்கை இவ்வளவு தூரம் பரப்பியதில்லை. ஆங்காங்கு உள்ள பண்பாடுகளோடு தமிழ்ப் பண்பாடு நன்கு ஒன்றி இணைந்தது. மனம் திறந்து கிறைந்த இந்தச் சர்வதேசத் தொடர்பின் அஸ்திவாரம், கடல் கடந்த வாணிபம் மாத்திரம் அல்ல: தமிழனின் ஆழ்ந்த இதயபூர்வமான மனிதாபிமானம் என்றே கூற வேண்டும். இதையே ஒரு தமிழ்ப் புலவர், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று: கூறுகிருர்.”

அவருடைய ஆங்கில உரையில் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஒன்றை நிறுவுவதற்கு வேண்டிய முயற்சிகள் யுனெஸ்கோவின் ஆதரவில் நடைபெற்று வருவ தாகவும், சென்னையில் அதனை கடத்துவதற்குரிய வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப் பெறுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வருக்கு 15-7-1970 ஆகிய அன்று லண்டனில் மருத்துவர்கள் கண்ணேச் சோதிக்கும் நிகழ்ச்சி இருந்தது. ஆயினும் தமிழ் ஆராய்ச்சி மாகாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினல் அவர் பறந்து: வந்து உரையை நிகழ்த்திவிட்டு லண்டன் திரும்பினர்.

மாண்புமிகு கலைஞர் கருணநிதி தம்முடைய உரையைத் தொடங்கும்போது, "நான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் குழ்கிலே முதலில் இல்லாமல் இருந்தது. கண் மருத்துவ சம்பந்தமாகச் சோதனை இன்று கடக்கவேண்டும்.