பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள் விழா - 77'

எழுத்துக்கள் பழங் திராவிட மொழியைச் சார்ந்தவை. என்றே கூறினர். அவருடைய கட்டுரையில் ஹிந்து மதம் என்பது பழங்காலத் திராவிடர்களிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்று குறித்திருக்கிருர்.

செக்கோஸ்லாவாகியாவில் பிறந்த டாக்டர் கமீல். ஸ்வலபில் என்பவர் பிறகு பேசினர். அவர் பல தமிழ் நூல்களைச் செக் மொழியில் பெயர்த்து வெளியிட்டிருக் கிருர். முன்பு தமிழ் நாட்டுக்கு வந்து சில காலம் தங்கிப் பல இடங்களில் பேசியிருக்கிருர். அவர் இப்போது

அமெரிக்காவில் இருக்கிருர். அவர் தம்முடைய உரையில். மொகெஞ்சதடோ எழுத்துக்கள் திராவிட மொழியைச் சார்ந்தவை என்று திட்டமாகச் சொல்ல முடியாதென்றும், பின்னிஷ் குழுவினர் கண்டுபிடித்துச்சொன்னது வலிவான ஆதாரத்தின்மேல் அமையாமல், உய்த்துணர்ந்து கூறிய தாகவே இருக்கிறதென்றும் சொன்னர்.

அடுத்தபடி பேசினர், திரு ஐராவதம் மகாதேவன். அவர் இந்திய அரசில் பெரிய பதவி வகித்தவர். இப்போது நேரு உதவி கிதி பெற்ற ஆராய்ச்சியாளராக இருக்கிருர். மொகெஞ்சதடோ எழுத்துக்களைப் பற்றிய, ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருக்கிருர். அவர் பேசும்போது, தம்முடைய ஆராய்ச்சியின்படி அவை திராவிட மொழியைச் சார்ந்தனவே என்று கூறினர். சங்ககால நூலிலுள்ள சொற்களோடும் தொடர்களோடும் ஒப்பு நோக்கும்போது அவை பழைய திராவிட மொழியைச் சார்ந்தவை என்றே. கொள்ளத்தக்கவை என்ருர்.

ஆராய்ச்சியரங்கில் இப்படி யெல்லாம் கருத்து மோதல்கள் ஏற்படுவது இயல்பு, மொகெஞ்சதடோ நாகரிகத்தைப்பற்றிப் பல வேறு நாட்டில் உள்ளவர்கள் பலவேறு வகையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிருர்கள். பழந்திராவிட நாகரிகம் என்றும், வேத காலத்து நாகரிகம் என்றும், ஆதிகால ஹிந்து நாகரிகம் என்றும் பலபடியான கருத்துக்கள் கிலவுகின்றன. ஆயினும் பெரும்பாலான