பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஆயிரம் அடிக்கு மேல்

இன்று உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கின் இரண்டாவது நாள். லண்டனிலிருந்து 52 தமிழர்கள் தனியே ஒரு பஸ்ஸில் வந்திருந்தார்கள். பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களும் மாணுக்கர்களும் அந்தக் குழுவில் இருந்தனர். அவர்களுடைய வரவினல் இரண் டாவது நாள் முதல், அவையில் கேட்பவர் கூட்டம் கூடுத லாயிற்று.

தமிழராகிய யோகி ராமையா என்பவர் தம்முடைய வெள்ளைக்கார மாணவர் சிலருடன் வந்து கூட்டத் தில் கலந்து கொண்டார். அவர் பல இடங்களில் யோகப் பயிற்சிச்சாலையை நிறுவியிருக்கிருர், மேல்காட்டு இளைஞர்களாகிய பலர் அவரிடம் யோகம் பயில்கிருர்கள். அவர்களில் ஆடவர்களும் உண்டு; மகளிரும் உண்டு. தமிழ்க் கருத்தரங்குக்கு வந்திருந்த ஆடவர்கள் நம்மைப் போல் வெள்ளேத் தற்ருடை உடுத்திக் கொண்டு தாடி வளர்த்திருந்தனர். கழுத்தில் ஜபமாலை அணிந்திருந்தனர். மகளிர் நம் காட்டுப் பெண்களைப் போல் தூய வெள்ளே ஆடை உடுத்திருந்தனர். அவர்கள் கழுத்திலும் ஜபமாலை இருந்தது. யோகி ராமையா கருத்தரங்கில் அவ்வப்போது தம்முடைய கருத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் எடுத்துரைத்தார். o

லண்டனில் ஒரு தமிழ்ச் சங்கம் இருக்கிறது. அதன் தலைவர் திரு குமாரவேலு வந்திருந்தார். அங்குள்ள ஹிந்து சபைத் தலைவர் திரு சபாபதிப் பிள்ளே தம் மனைவியுடன்