பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் அடிக்கு மேல் 37

துணே புரிந்திராவிட்டால் பல இடங்களைப் பார்த்திருக்கவே முடியாது.

ஸேன் முானுடன் புறப்பட்டேன். 'இப்போது படம் எடுத்தால் நாளேக்கு அந்தப் பிரதி கிடைக்குமா?' என்று கேட்டேன். 'நாளேக்கா? ஐந்து நிமிஷத்தில் படங்களே வாங்கித் தருகிறேன்' என்று சொல்லி என்னை அழைத்துக் கொண்டு சென்ருர். ஒரு ஸ்டுடியோவுக்குச் சென்ருேம். அங்கே ஓரிடத்தில் உள்ள துளையில் பணத்தைப் போட்டு விட்டு அமர்ந்தால் மூன்றே நிமிஷத்தில் நிழற்படப் பிரதிகள் வேருெரு துவாரத்தின் வழியே வந்து விழுகின்றன. மூன்று பிராங்குக்கு ஆறு படங்கள். அங்கே ஒரே கூட்டமாக இருந்தது. ஆகவே வேருெரு ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்ருர். அங்கே படம் பிடித்தார்கள். நான் அமர்ந்து படம் எடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் என் கையில் 12 படங்களைத் தந்தார்கள்; அதற்கு விலை ஏழே பிராங்க்!

படங்களே வாங்கிக்கொண்டு காலேஜ் த பிரான்சு போனேன். காலே நிகழ்ச்சிகள் முடிந்தமையால் அங்கிருந்து டாக்மார் ஹோட்டலுக்குப் போனேன். என்னுடன் சென்னே உயர் நீதிமன்ற நீதிபதி திரு எஸ். மகாராஜனும் அன்பர் ஸேன் ழானும் திரு சா. கணேசனும் திரு கா. அப்பாதுரையும் வந்தார்கள். லண்டனில் பி. பி. ஸி. யில் தமிழோசை பரப்பும் திரு சங்கரமூர்த்தியும் வந்தார். அவர் தமிழ்க் கருத்தரங்கு நிகழ்ச்சிகளைப் பி. பி. ஸி. மூலம் ஒலி பரப்புவதற்குப் பேச்சுக்களைப் பதிவு செய்ய வந்திருந்தார். பாரிஸிலிருந்தே அவ்வப்போது பேச்சுக்களே லண்டனுக்கு வான் வழியே அனுப்பினர்.

எங்கள் பேச்சுக்களைப் பி. பி. வி. யில் ஒலிபரப்ப விரும்பினர் திரு சங்கரமூர்த்தி. லண்டனுக்குச் சென்று ஒலிபரப்பில்ை ஒரு பேச்சுக்கு ஐந்து பவுன் அன்பளிப்பாக வழங்குவார்களாம். வேறு இடங்களில் பதிவு செய்தால் பணம் கொடுக்க மாட்டார்களாம். பணத்தைப்பற்றி காங்கள் கவலைப்படவில்லை. எங்களுக்கு விருப்பமான