பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் அடிக்கு மேல் 89.

ர்ைகளோ அங்கும் இது பரவியது. தமிழ் தமிழ்நாட்டிலும் தமிழர் குடியேறிய இடங்களிலும் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள பல அறிஞர்கள் இந்த இரண்டு மொழிகளேயும் கற்ருர்கள். பலர் இரண்டு மொழிகளையும் வளம்படுத்தினர்கள். -

வடமொழிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் நெடுங் காலமாக இணைந்து வாழ்ந்து வந்திருக்கின்றன. முதல் முதலாக வரலாற்றில் தமிழைப் பற்றிய செய்தி வரும் இடம் மெகாஸ்தனிஸ் எழுதிய பயணக் குறிப்புக்கள். மதுரை அரசியைப் பற்றி அவர் குறிப்பிடுகிருர். மெகாஸ்தனிஸ் தென்னிந்தியாவுக்கு வரவில்லை. அவர் தமிழ் நாட்டைப் பற்றிக் கேள்வியுற்றவற்றையே குறித்திருக்கிருர். அதி லிருந்து கி. மு. நான்காவது நூற்ருண்டிலேயே பாரத காட் டின் வடபகுதிக்கும் தென்பகுதிக்குமிடையே தொடர்பு இருந்தது என்பது தெரியவரும்.

கி. மு. 3-ஆவது நூற்ருண்டில் அசோகருடைய கல்வெட்டில் சோட, பாண்டிய, கேரள புத்திரர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது.

இப்போது கிடைக்கும் சங்க நூல்களில் வடநாட்டுக்கும் தென்னட்டுக்கும் இடையே இருந்த தொடர்பைத் தெரிவிக்கும் குறிப்புகள் பல கிடைக்கின்றன. களப்பிரர் இடையீட்டுக்கு முன்பே (கி. பி. 400) வேத வழக்கு இங்கே இருந்திருக்கிறது. ஆயினும் சங்க காலத்து நூல்களில் வடமொழியிலிருந்து எடுத்து வழங்கிய சொற்கள் அதிகம் இல்லை. பிற்கால இலக்கியங்களில் அப்படி அன்று.

முதலில் பிராகிருதம் பரவியது. பிறகு ஸம்ஸ்கிருதம் எங்கும் பரவியது. சமயம், கலைகள், இலக்கியத் துறை களில் வடமொழி நூல்கள் அங்கும் பரவின. தமிழ் நாட் டிலும் அவை வழங்கின. தமிழ்நாட்டில் இலக்கிய அறிஞர் களிடம் மட்டுமன்றிப் பொதுமக்களிடையேயும் வடமொழி மதிப்புப் பெற்றது. அரசியல் அதிகாரமோ, இலக்கிய மேம்பாடோ காரணமாக அதை வற்புறுத்தித் திணித்