கண்ணகியின் கனவு! (சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் காவிரிப் பூம்பட்டினத் திலுள்ள வணிகர் தெரு, கோவலன் இல்லம். பிற்பகல் நேரம் கண்ணகி கவலையுடன் தன் அறையிலே படுத் திருக்கிறாள். பலமுறை அழைத்தும் கண்ணகி உணவு கொள்ள எழாததினால்-காரணம் புரியாது தெருப்புற வாயி லருகே அமர்ந்து சாலையில் நடப்போரை பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் சகி. கண்ணகியின் தோழி தேவந்தி, இல்லத்தினுள் பிரவேசிக்க, சகி எழுந்து மரியாதை செலுத்து கிறாள்.) தேவந்தி:- சகி, கண்ணகி எங்கே? சகி :- மனக்கவலை போலும்! அறையிலே கிறார்கள் அம்மா. தேவந்தி:- (துடிப்புடன்) கவலைக்குக் காரணம்? படுத்திருக் சகி :- அதுதான் எனக்கும் புரியவில்லை! பலமுறை கேட் டேன் பதில் இல்லை. பகல் உணவுகூடக் கொள்ள வில்லை. தேவந்தி - ஒரு வேளை, மாதவி வீட்டிலேயே தங்கிவிட்ட தன் கணவனைப் பற்றி நினைத்துக்கொண்டு துக்கிக் கிறாளோ? சகி : அப்படியானால் இத்தனை நாட்களும் அந்த நினைப்பு அவர்களுக்கில்லாமலா இருந்திருக்கும்? தேவந்தி :- அப்படியல்ல! இன்று அதிகமாக அந்த நினைவு தொல்லை தந்திருக்கும் என்று சொன்னேன். சகி :- அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. ஏதோ புதிதாக கவலை அவர்கள் மனத்லே புகுந்திருக்க ஒரு
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை