14 றேன். உன் கணவராகிலும் ஊரிலேயே இருக்கிறார். என் ஆத்துக்காரரோ, எங்கெங்கோ தீர்த்த யாத்திரையும், க்ஷேத்திராடனமும் செய்து கொண்டிருக் கிறார். இதற்காகவா கலங்குவது? கண்ணகி :- நீ பரிகாசம் செய்வாய் என்பது எனக்கு முன்னமேயே தெரியும் தேவந்தி. தெரிந்தும்தான் சொன்னேன். உனக்கு இது அசட்டுத்தனமாகத் தோன்றலாம் ஆனால் எனக்கு இது நிச்சயம் என்றே படுகிறது. தேவந்தி:- நிச்சயம் தான்! அரண்டவன் கண்ணிற்கு இருளைப் பார்த்தால் கூட அது பேய் என்பது நிச்சயம் என்று தானே தோன்றும்? அது கிடக்கட்டும். நான் சொல்வதைக்கேள். நம்ம ஊர்க் கடற்கரைப் பகுதியில் 'சோம குண்டம்', 'சூரிய குண்டம்' என்று இரண்டு தீர்த்தக்குளங்கள் உண்டு! அதில் மூழ்கி, அதன் கரையிலுள்ள தெய்வத்தை வணங்கினால், பிரிந்த கணவனோடு பெண்டிர் இன்புறுவர் என்பது புராணம். வா, அங்கு சென்று நாமிருவரும் மூழ்கி, அத்தெய் வத்தைக் கும்பிட்டு நம் கணவன்மார்களைத் திருப்பித் தரும்படி வேண்டுவோம். அவசியம் அந்தத் தெய் வத்தின் அருளால் வந்தே சேருவார்கள். வருகிறாயா? கண்ணகி :- தேவந்தி! இது தமிழ்ப் பெண்கள் வரலாற்றிலில் லாத கதை, கற்பிற்கும் மாசு. நான் இதற்கு உடன் பட முடியாது! தேவந்தி.- எது? தன் கணவன் வர வேண்டும் என்று தீர்த்தத்தில் மூழ்கி, தெய்வம் தொழுவதா கற்புக்கு மாசு? அப்படியானால் தெய்வத்தைப்பற்றி உன் கருத்தென்ன? கண்ணகி :- தேவந்தி, நான் தீர்த்தத்தையோ தெய்வத் தையோ இகழவில்லை இகழப் போவதுமில்லை. இகழ நினைக்கவுமில்லை. ஆனால், சென்ற கணவன்
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை