பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சிறப்பும்,தேசத்தை ஆளும் மன்னன் சிறப்புமே அதிகம் பரிணமித்தன. இதற்குத் தமிழ்ச் சுவடிகளிலே நிறைய ஆதாரங்களுண்டு. இங்கே சிலப்பதிகாரத்தில் வரும் சோழ பாண்டிய-சேரநாட்டுப் பெண்களின் நாட்டுப்பற்றைக் காண்போம்! அம்மானை என்பது பெண்கள் வீட்டில் அமர்ந்து ஆடக் கூடிய ஒருவித விளையாட்டு. இந்த விளையாட்டினூடே பாட்டும் உண்டு. ஒரு பெண் கேள்வி கேட்க, இன்னொரு பெண் பதில் சொல்ல, இப்படி கேள்வியும் பதிலுமாக உள்ள பாட்டுடன் ஆடப்படும் ஆட்டம் அம்மானை. சிலப்பதிகார காலத்துச் சோழ மண்டலத்துப் பெண்கள் அம்மானை ஆடு பெண் கிறார்கள். அந்த ஆட்டத்தின் முறைப்படி, ஒரு கேள்வி கேட்கிறாள். அந்தக் கேள்வியானது, நீ போட் டிருக்கும் வளையல்கள் செய்யத் தங்கம் எவ்வளவு பிடித்தது உன் புடவை என்ன விலை என்ற கேள்வியாக இல்லை. என்ற தன்மையிலுமில்லை. உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல் என்று கேட்கப்படவுமில்லை. அசல் அரசியல் கேள்வியாக, தேசபக்தி நிறைந்ததாக, நாட்டை ஆள்பவனின் வீரத்தை விளக்குவதாக இருக்கிறது! "தங்களைவிட உயர்ந்தது எதுவுமில்லை என்கின்ற அளவில் வளர்ந்து-உயர்ந்த எட்டு மலைகளும் பார்த்திருக்க- அந்த எட்டு மலைகளிலும் மிக்க உயர்ந்த இமயமலை முடியில் புலி (கொடி) பொறித்தவன் யார்?' இப்படி ஒரு பெண் கேட்கிறாள். அதற்கு ஒரு பெண். GUNT

    • திக்கெட்டையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆளும்

மன்னவன்” என்று பதில் கூ கூறுகிறாள். உடனே இரு பெண் களும்- "அந்த மன்னவன் வாழும் புகார் நகரத்தைப் பாடு வோம்" என்று கூறி அம்மானை ஆடுகிறார்கள்.