காதலும்-காவலும் ஒன்றைத் தாண்டிவரின் மற்றொன்று தடுத்து நிறுத்தும் விதத்தில் பலவிதத் தடுப்பு அரண்களைக் கொண்டதாகக் கோட்டை அமைத்து, அதனுள் தங்கி, நாடு நலம் பெறக் காத்து வாழ்ந்தனர் பழந்தமிழ் மன்னர்கள். எதிரிகளின் படை எவ்விதம் முயன்றாலும் அரணைக் கடந்து உள்ளே செல்வது இயலாத காரியம் ! இத்தகைய கோட்டைகளிலே ஒன்று உறந்தையெனும் நகரில் தித்தன் எனும் வேந்தன் நிறுவியிருந்த கோட்டை. அது கற்களால் சூழப்பட்டிருந்தது. அந்தக் கோட்டையின் காவல் சிறப்பை விளக்க எண்ணினார் பரணர் என்னும் செந்நாப் புலவர். எப்படிச் சொல்வது? ஏதாவது ஒரு உவமை வடிவில் விளக்கினால்தான் மக்கள் மனதிலே அது என்றும் நிலைத்து நிற்கும். என்ன உவமை யில் விளக்குவது...? யோசித்தார். யோசித்த பரணருக்குக் கற்பனைக் கண் திறந்தது ! தான் விரும்பிய இளைஞனை, தனது அறியாது துணைவனாக ஏற்று விட்டாள் இல்லத்தார் ஒரு பெண். இரவிலே இரு வரும் அவன் அவர்கள் பலரறிய பகலிலே சந்தித்தால் ஊர் அலர் தூற்றும். எனவே, திருமணம் நிகழும் வரை ஊர் அடங்கியதும் சந்திப்பதுதான் சரியென்று முடிவு கட்டினர். அதுவும் அவள் இருக்குமிடத்திற்கு வருவது என ஏற்பாடு. அதன்படி தினம் தினம் வந்ததும் அவன் வரவுக்காக அவள் காத்திருக்கிறாள். ஆனால், அவன் வரவில்லை. அவள் மோசக்காரனல்ல. வராமல் இருந்துவிடக் கூடியவனுமல்ல. அவளை மனப் இரவு பூர்வமாகக் காதலிக்கிறவன். ஆனால் அந்த ஊர் எப் பொழுதுமே உறங்குவதில்லை. ஊர் விழித்திருக்கும்போது சந்திப்பது ஆபத்தில்லையா? எனவே, ஊர் உறக்கத்தை எதிர்பார்த்து இவள் இங்கே விழித்தபடி காத்திருக்க,
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை