பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவன் கதவம் திறமினோ! போர்க்களம் சென்றிருக்கின்றான். அவன் சென்று பல நாட்கள் ஆயின. போர் முடிந்து . விட்டது. 'இனி கணவர் வெற்றி மாலை சூடிவிட்டான் தன் கணவன் என்ற செய்தியை அவள் கேள்விப்பட்டு ஆனந்தத்தால் பூரித்தாள். என்ன வேலை? இன்றே வந்து விடுவார் என் என்று எண்ணிப் பூரித்தாள். வரும் அவனுடன் பேசுவதற் கான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தாள். சிறுதிண்டி களைச் செய்தெடுத்து வைத்தாள் 'வருவான் வருவானென' வாசலுக்கும் தெருவுக்குமாக நடந்தாள். ஏக்கம் வளர்ந்தது. ஏனோ அவன் வரவில்லை ! உள்ளம் தளர்ந்த அவள் முதி யோரை விசாரித்தாள். 'உன் கணவன் சார்ந்துள்ள படை அணியினர் நெடுந்தொலைவிலிருக்கின்றார்கள். வரும்வழி நெடுகிலும் மக்கள் நல்கும் வரவேற்பு, பாராட்டு, விருந்து போன்றவற்றை மறுக்காமல் ஏற்றுத் தங்கி, வரவேற்பளிப் போர் நடத்துகின்ற களியாட்டங்களையெல்லாம் கண்டு களித்து வரவேண்டும். உடனே வந்துவிட முடியுமா? போர் முடிந்ததும் மனைவியை வந்து பார்ப்பதைவிட மற் றென்ன வேலை என்று நீ எண்ணுகிறாய்! படை வீரர் களால் அப்படி வர முடியாதம்மா!" என்று சொன்னார்கள். அறிந்திருந்தவர்களோ, இன்று பகலோ அல்லது விடிவதற்கு முன்னரோ படைவீரர்கள் ஊர் திரும்பி விடுவார்கள் எனப் பேசிக் கொண்டார்கள். அதைக் கேட்டு மகிழ்ச்சியோடு திரும்பிய அவள், எதிரில் வந்து கொண் டிருந்த மற்றொரு இளம்பெண் மீது மோதிக் கொண்டாள். அந்த மங்கை, தான் பட்ட அடியையும், அவ்வடியினால் ஏற்பட்ட வலியையும் மறந்து, "உன் கணவர் என்றைக்கு வருவாராம்? என்று கேட்டுத் தன் வரவைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள். அதாவது அவள் உண்மையை 64 கணவன்