பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உங்கள் கணவன் மார்கள் திரும்பி விட்டனர். கதவைத் திறவுங்கள்' என்று இனிய குரலில், கேட்டோர் இதயம் களிப்பெய்தப் பாடுகிறார் புலவர். வருவார் கொழுந ரெனத் திறந்தும் வாரார் கொழுந ரெனவடைத்தும் திருகுங் குடுமி விடியளவும் தேயுங் கபாடந் திறமினோ இந்த இனிய பாடலையும், புலவர் வேண்டுகோளையும் கதவைத் கேட்ட பின்புமா பெண்களின் கோபம் நீடிக்கும்? திறந்து தத்தம் கணவர்களை வாழ்த்தி வரவேற்றுத்தானே இருக்க வேண்டும் ! கணவனை இது செயங்கொண்டார் பாடியது. கலிங்கத்துப் பரணி யில் கடை திறப்பு எனும் பிரிவில் உள்ளது. எதிர்பார்த்து, மூடி மூடித் திறந்ததால் கதவின் அடிப்புறம் தேய்ந்து போய் விட்டதென்ற வாக்கியத்திலே பெண்களின் மனோபாவத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் செயங் கொண்டார். பாடப்பாட இனிக்கும் இன்தமிழ்ப்பா இது. வருவார் கொழுந ரெனத் திறந்தும் வாரார் கொழுந ரென வடைத்துந் திருகுங் குடுமி விடியளவும் தேயுங் கபாடந் திறமினோ இது போன்ற இனிய பாடல்களைக் கொண்ட நூல் வேறு மொழிகளில் இருக்குமா என்பது ஐயத்திற்குரியதுதான். 11-12-1955 சாட்டை எனும் திங்கள் ஏட்டில் வெளிவந்தது.