பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B வள்ளுவரும் மாணாக்கனும் (வள்ளுவர் வாழ்ந்த காலம், நேரம் - மாலை) வள்ளுவர் தனது தொழிலாகிய நெசவு வேலையை முடித்து விட்டுச் சுவடி யொன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் மாணாக்கருள் ஒருவன் அங்கு வந்து அவரை வணங்கி விட்டு மௌனமாக அமர்ந்தான். சிறிது நேரம் சென்றது. வழக்கமாக ஏதேனும் ஐய வினாக்களை எழுப்பிச் சந்தேக விளக்கம் பெற்றுச் செல்லும் இயல்புடையவன் அவள். அன்று அவன் மெளனமாக இருந்த தானது வள்ளுவருக்கே ஐயத்தை உண்டாக்கிற்று! 'என்ன தம்பி, ஏன் என்னவோ போலிருக் கிறாய்? சோர்வு இளமையைக் கொல்லும் நஞ்சு! நிமிர்ந்து உட்கார். என்ன நடந்ததென்பதை என்னிடம் சொல்லு!" என்றார் வள்ளுவர். வரும் வழியில் ஒரு விவாதம். கற்றோர் பலர் கூடி விவாதித்தனர்.சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். கற்றோர்கள் பேசும் பேச்சாக இல்லை அது. வயதில் முதிர்ந் தோர்களாயிற்றே என்பதினால் மௌனமாக வந்தேன். மனோவெழுச்சியை அடக்கியதினால் உள்ளம் சோர்வு தட்டி இருக்கிறது. வேறொன்று மில்லை" என்றான் மாணாக்கன். . வள்ளுவர் சிரித்துக் கொண்டே, "அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறியலாமோ?” என்று கேட்டார். "அறம் என்பதைப் பற்றியது அவர்களின் சர்ச்சை. ஈதலே அறம் என்பது அவர்கள் கண்ட விவாதத்தின் முடிவு" என்றான் மாணவன். வள்ளுவர்: உன் கருத்தென்ன? மாணாக்கள் : ஐயாவைக் கேட்டு ஐயம் தெளியவே அடியேன் வந்தேன்.