வள்ளுவர்: ஐயம் தெளிய நீ இங்கே வந்தமைக்குப் ப கிறேன். ஆனால், உன் முடிவு ஈதல் அறமல்ல? என்றிருக்கும் போது உனக்கெப்படி நான் விளக்கம் கூற முடியும்? ஐயமென்பது 'இது சரியா, அது சரியா?" என்று தெளிவு பெறாமலிருப்பதே. நீயோ ஈவது அறமல்ல என்ற முடிவுடன் வந்திருக்கிறாய்! எனவே நீ முதலில் ஈவது அறமல்ல என்பதற்கான காரணத்தை விளக்கிக் கூறு. பிறகு நான் அறம் எது என்பதைச் செப்புகிறேன். மாணாக்கன்: ஈதலே அறமென்று கொண்டால், ஈபவரும், பெற்றுக் கொள்பவர்களும் சமுதாயத்தில் இருந்தேயாக வேண்டும். அறம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற் காக, தேவை தேவையென்று சுற்றியலைபவர்கள் நாட்டி லிருக்க வேண்டும் என்பதில்லை யல்லவா? அதனால் ஈதலே அறம் என்பது தவறு என்பது என் கருத்து. வள்ளுவர்: வறியோருக்குச் செல்வந்தர் கொடுக்கும் பிச்சைப் பொருளை ஈதல்என்று கொண்டால், ஈதல் அறமல்லதான். இரப்பவர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே சரி யான அரசியல் அறம், ஆனால் அறம் என்பதை ஈகை என்றும், இரக்கம் என்றும், அன்பு என்றும் பொருள் கொள்ளும்போது உன் முடிவு தப்பானதாகி விடும். மாணாக்கன் : எப்படி? வள்ளுவர்: தெருவோடு செல்லும் செல்வந்தர் ஒருவருக்குத் தண்ணீர் தாகம். அருகில் குடிசை ஒன்றிருக்கிறது. சென்று தண்ணீர் கொடுங்கள் என்று கேட்பதா? இரப்பது கூடாது என்று தாகத்துடன் செல்வதா? சென்று கேட்டால், குடிசைக்காரன் கொடுப்பதா? இரப்பதும் கொடுப்பதும் கூடாதென்று மறுப்பதா? மாணாக்கள் : செல்வந்தர் கேட்பதும் குடிசைவாசி கொடுப் பதுமே அறமாகும், வள்ளுவர்: தெரிந்து கொள்! ஈவது மட்டுமல்ல, இரப்பதும் கூட அறத்தின்பால் பட்டதாகிவிடும் சூழ்நிலையால்!
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை