பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய மாணாக்கன்:- அவர்கள் விவாதம் ஈதலே அறம்; அதாவது ஈவது மட்டுமே அறம் என்பதாகும். வள்ளுவர்:- அதுவும் தவறல்ல. அறத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற முடிவுடன் நாம் அறத்தின் தன்மை எது என்பது பற்றி ஆராயலாம். மாணாக்கன் :- அறம் என்பது எது என்பதைப் பற்றி ஐயா அவர்கள் முழு விளக்கமும் தரவேண்டும். வ கமும் வள்ளுவர்:- அறம் என்பதற்குச் சுருக்கமான பொருள் எண்ணத்தாலும் ஒருவன் குற்ற மற்றவனாகத் திகழ வேண்டும் என்பதே! மனத்துக்கண் மாசிலனாத லனைத்தற னாகுல நீர பிற. இதை விவரிக்கின், பொறாமை, தனக்குரியன அல்லாத பொருள்களின் மீது ஆசை, வீண் கோபம், கடுஞ்சொல் காரனாய் இருத்தல் ஆகியவைகளிலிருந்து ஒவ்வொரு மனித னும் விடுபட்டவனாக ஆதல் வேண்டும் எனக் கூறவேண்டிய தாகும். களி யின்னாச் சொன்னான்கு அழுக்கா றவாவெகுளி மிழுக்கா வியன்ற தறம். அதுமட்டுமல்ல. கு விதிமுறைப்படி நாளைக்கு நடந்து கொள்வோம்; இன்றைக்கு மட்டும் பொறாமை கொள்வோம்; பிறர் பொருள்களைக் கவர்ந்து கொள்வோம்; வீண் கோபத் தையும் கடுஞ்சொற்களையும் உபயோகிப்போமென்று எண் இன்றையிலிருந்தே - இந்தக் கணத்திலிருந்தே எல்லோரும் அறம் வழுவாமல் நடப்பதே அறமாகும் அப்படி நடப்பதால் அவன் இறந்த காலத்திலும் அறம் இறவாத் துணையாக அவனுடன் நிற்கிறது! ணாமல், கு த அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை.