பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 செல்வத்தின் பயனோ யீதல் துய்ப்போ மெனிலோ தப்பினர் பலரே! நண்பர் இந்த வரிகளைக் கூறினார். நான், 24 'செல்வத்துப் பயனே யீதல் துய்ப்பே மெனினே தப்புந பலவே" இதுதான் ஏட்டிலுள்ள தென்றேன். உண்மை என்று ஒப்புக் கொள்ள வேண்டிய நண்பர் "தப்பு தப்பு" என்று கத்தினார். நான் நூலினை எடுத்து நீட்டினேன். A "மூடுமையா உமது நூலை நூலிலிருப்பது தப்பு என்பது தானே என் கூற்று?" என்றார் நண்பர். "உங்கள் சொந்தக் கருத்தை வைத்து பழைய பாடல் கவைத் திருத்தக் கூடாதய்யனே" என்றேன். நண்பர் விடு வாரா? "என்னய்யா நீர் சொல்லுகிற வரிகட்குள்ள அர்த்தம்?" கேட்டார். என்று "செல்வத்துப்பயன் ஈதல் செல்வத்தால் பெறும் பயனாவது கொடுத்தல், துய்ப்போம் எனின் தப்புந பல; செல்வத்தை நாமே நாம் மட்டுமே நுகர்வோமென்று கருதின் தவறுவன பல" ம என்று உரையாசிரியர் குறித்துள்ளார் என்று கூறினேன். உடப்பிலே .. உமது உரையாசிரியரைக் கொண்டு தள்ளும், உரையாம் உரை" என்று சினந்தவர். பாட்டா ஐயா? ' என்று கேட்டார் “இல்லை செய்யுள்” என்று செப்பினேன். 86 "அத்தனையும் இது இடை செருகல்! அர்த்தம் கெட்ட செய்யுள்! தவறுவன பலவாம். அப்படியானால் அனுபவித்த வரையில் ஆதாயம் தானே ஐயா? சில தப்பினால் தொலை யட்டுமே" என்றார். "ஐயா என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

    • செல்வத்துப் பயனே யீதல்”