பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கியோன் உரை நான் முதன் முதலில் எழுதத் தொடங்கியது கதை, கட்டு.- ரைகள் அல்ல, கவிதைகளே. இவைகளையும் சஞ்சிகைகளில் அல்ல. நண்பர்களின் திருமணங்கள், தலைவர்களின் வரவேற் புகள் ஆகியவற்றின் வாழ்த்துக்களாகவும் வரவேற்புமாகவே அமைந்தன. என்னைக் கதைகள் கட்டுரைகள் படைக்குமாறும், அவை களைச் சஞ்சிகைகட்கு அனுப்பி வெளியிட்டு நுகர்வாளர்களை மகிழ்வித்து மகிழுமாறும் வலியுறுத்தியவர் மேதாவி' எனும் புனைப்பெயர் பூண்டு திகழும் திரு. கோ த. சண்முக சுந்தரம் அவர்களே! நான் கதை கட்டுரைகள் எழுதத் தொடங்கிய காலம் 1937 ஆகலாம். கவிதைப் படைப்புக்கள் 1933லிருந்து. அச்காலை (1937) வெளிவந்து கொண்டிருந்த திங்கள், திங்கள் இரு முறை, கிழமை ஏடுகள் ஏனைய எழுத்தாளர்களின் படைப் புக்களை விரும்பி வெளியிடுவதொப்ப எனது படைப்புக்களை யும் வெளியிட்டு ஊக்குவித்தன. பழந்தமிழ் இலக்கியங்களை அவற்றையும் கவிதைகளா கவே படித்து வருவதில் எனக்கிருந்த ஆர்வம், இலக்கியக் கட்டுரைகளையும் வரைந்திட தூண்டிடலாயிற்று. எழுதுவதில் கவிதைகளையே முதலில் கைக்கொண்டவன் என்பது போன்று. என ஏது முதலில் நூல் வடிவம் எழுத்துக்களில் கவிதைகளே பெற்றன. ஆம். 1946-ல் ஒளி எனும் தலைப்பினைக் கொண்ட எனது கவிதை நூல் வெளி வந்தது: பாரதி தாசனாரின் முதற்கவிதைத் தொகுப்பை தமது முன்னுரையின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த 'வ.ரா. (வ.ராமசாமி ஐயங்கார்) அவர்களே என்னுடைய "ஒளி யையும் முன்னுரையின் மூலம் அறிமுகம் செய்தார். எனது சிறுகதைத் தொகுப்பு 1946 ல் முதன் முதலில் வெளி வந்து காதலும் கடமையும்' எனும் அந் நூலை இலக் •