பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் வளர்ப்போம்! இராமாயணக் காவியத்தை இந்தியர்கள் அறிவார்கள், பாரத காவியம் பாரதநாடு முழுவதுக்கும் தெரியும். ஆனால், செந்தமிழ்க் காவியம் சிலப்பதிகாரத்தைத் தமிழர்களே சரியாக அறியமாட்டார்கள். நம்மிடத்திலே இரண்டு விதச் சிலப்பதிகாரங்கள் இருக்கின்றன, ஒன்று விளம்பரமான சிலப்பதிகாரம்: மற்றொன்று விளம்பரமாகவேண்டிய சிலப்பதி காரம். இதை இலக்கியச் சுவைபடச் சொல்ல( வேண்டு மானால், முன்னதைச் சிதைப்பதிகாரம் என்றும், பின் வருவதைச் சிலப்பதிகாரம் என்றும் கூறலாம். சிதைப்பதி காரத்திலே கதாநாயகன் கோவிலன்; கதாநாயகி கர்ணகி. இந்த இருவரின் வாழ்க்கையில் இடைப் புகுபவளுடைய பெயர் மாதகி. கதாநாயகன் கோவிலன். கதாநாயகி கர்ணகியை ஐந்து வயதுப் பெண்ணாக இருக்கும் போது, மாங்கனியை கையில் கொடுத்து மாங்கல்யம் தறிப்பான். கல்யாணத்தில் ஆடவந்த தாசி மாதகியுடன் அவள் இல்ல மேகி வாழ்வான், கர்ணகி கல்யாணமாகியும் கன்னியாகவே காலங்கழிப்பாள். மாதகி 'கணிகை' (விலைமாது) கோவில னுடைய சொத்துச் சுகங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு விரட்டியடிப்பாள். வீடு வந்த கோவிலன் கர்ணகியை அழைத்துக் கொண்டு மதுரை செல்வான். சிலம்பு விற்கச் சென்ற இடத்திலே வஞ்சிப்பத்தன் வஞ்சகத்திற்கு ஆட்பட்டு கொலைக்களம் புகுந்து மாண்டு மடிவான். வெட்டுண்டு கிடக்கும் கோவிலனைக் கர்ணகி எடுத்து வைத்து அழுது புலம்புவாள். அவள் கற்பின் மகிமையால் உயிர் பெற்ற கோவிலன்- "மாதகியோ கர்ணகியோ வந்தவளாரடி மாதகியானால் மடிமேல் வா, கர்ணகியானால் -கடுகிப்போ'