61 என்று, செத்தவனுயிர் பெற்றும், உத்தமியை விடுத்துப் பரத்தையை நினைத்து புலம்புவான். பாண்டியன் அவையிலே துன் மந்திரி நன் மந்திரிகள் இருப்பார்கள். பாண்டியன் துன் மந்திரி சொற்கேட்டு கோவிலனுக்குக் கொடுமை புரிவான். கோவிலன் இறந்துவிட்ட செய்தியை மாங்காய் அழுகி மாவிளக்கு நின்று, தேங்காய் அழுகி, திருவிளக்கு நின்று தீச்சகுணம் தெரிவிக்கும். பார்ப்போர் கண்களிலே அண்ணர் அருவி பெருக்கெடுத் தோடச் செய்யும். அவலச் சுவை மலிந்த அருமையான நாடகம் சிதைப்பதிகாரம். அது செந்தமிழ் நாட்டு பாமர மக்களிடையே பரவி விளம்பரமாகியிருக்கிறது. நீண்ட காலமாக. பணியைக் நாம் விளம்பரமாக்க வேண்டியது இந்தக் கதையை அல்ல. இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகார காப்பியத்தைத் தான் விளம்பரப்படுத்த வேண்டும். இந்தப் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தமிழரசுக் கழகம் செய்து வருகிறது. அதன் தலைவர், ம.பொ.சி. சிலப்பதிகாரத்தைப் பரப்பும் காரணத்தினால், மக்களால் சிலம்புச் செல்வர் என்ற சிறப்புப் பெயர் சூட்டப் பெற்றிருக்கிறார். சிலப்பதிகார கதை யிலே கோவிலன் கிடையாது; கோவலன் உண்டு. கர்ணகி கிடையாது; கண்ணகி உண்டு. மாதகி இல்லை; மாதவி உண்டு. கோவலனுக்கு செட்டியார் பட்டமும், பொற் கொல்லனுக்கு வஞ்சிப்பத்தன் பட்டமும் மாதவிக்கு தாசி என்ற சாதிப் பட்டமும் கிடையாது. சாதிப் பிரிவுகள் வலுப் பெறாக் காலத்திலே வந்த கதை சிலப்பதிகாரம். பாண்டியன் அவை யிலே துன் மந்திரி கிடையாது. அந்தத் துன் மந்திரியின் போதனைப்படி பாண்டியன் நடந்ததுமில்லை கண்ணகிக்கு அறியாப் பருவத்திலே திருமணம் நடக்கவில்லை. அறிவுடைய மங்கையான பின்புதான் நடந்தது. அவளோடு அன்பாக வாழ்க்கை நடத்தினான் கோவலன். இடையிலே ஒரு நாள் மாதவியைக் கண்டான். மனத்தைப் பறி கொடுத்தான். அவளும் அதே நிலையானாள், சொத்தினை பறிப்பவளாகவோ, சூதுக்காரியாகவோ, மாதவி இருந்ததில்லை, கோவலனின்
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/62
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை