பக்கம்:கண்ணகி தேவி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

29


யையும் தன் பிள்ளையையும் வீட்டில் வைத்து வெளியிற் சென்றாளாக, அப்போது படுத்திருக்கும் பிள்ளை யருகில் ஓர் அரவம் வருதலைக்கண்ட நகுலம் அதனைத் துணிந்து, இரத்தம் பூசிய முகத்துடன் வாயிலில் வர, பார்ப்பனி தன் பிள்ளையையை அது கடித்துவருகின்ற தென்று பதறி, கையிலிருந்த பாண்டத்தைக் கீரியின் தலையில் போடக் கீரி உடனே மாண்டது. இதனை அறிந்த அவள் கணவன், வந்த பாவத்துக்கு வருந்தி, கங்கையாடவடதிசைநோக்கிப் புறப்பட்டான். புறப்பட்ட கணவனை மனைவி பின் பற்றிச் செல்ல, அவன், ‘இனி, பாவியான உன் கையால் உணவு கொள்ளேன்,’ என்று கடிந்துரைத்து, ஓரேட்டில் வடமொழி வாசக மொன்றை எழுதிக்கொடுத்து, ‘இதனைக் கடனறிந்த மாந்தர் கையிற்கொடுக்க,’ என்று சொல்லிப் போயினான். போகவே, பார்ப்பணி அவ்வோலேயைக் கைக் கொண்டு வணிகர் வீதியிலும் பிற வீதியிலும், இவ் வேட்டை வாங்கி என் பாவம் தொலைத்துப் பயன் கொள்ளுங்கள்,' என்று கூறிச்சென்றாள். நீ அழைத்து அந்த ஏட்டை வாங்கி வாசித்து அவளைத்தேற்றி அவளது கொலைப் பாவம் தீர முறைப்படி தானங்களைப் புரிந்தாய், அஃதோடமையாது, அவள் கணவனையும் வரவழைத்து, அவர்கள் இன் புற்று வாழச் செய்து வேண்டிய செல்வத்தையும் அவர்கட்கு வழங்கினாய்.

“இன்னும், காவிரிப்பூம்பட்டினத்தில் பத்தினி யொருத்தியை ஒழுக்கங் கெட்டாளென்று அறிவில்லான் ஒருவன் அவள் கணவனுக்குப் பொய்ச்சான்று கூறினான். அவ்வளவிலே, பொய்க்கரியாளரைப் புடைத்துத் தின்னும் சதுக்க பூதத்தின் கைப்பாசம் அவனைக்கட்டி இழுத்துச்செல்ல, அவன் தாய் தன் ஒரு மகனையும் இழப்பதற்கு ஆற்றாது அரற்றி அழுதாள். அதைக் கண்டு இரக்கங்கொண்ட நீ, அப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/37&oldid=1410960" இலிருந்து மீள்விக்கப்பட்டது