பக்கம்:கண்ணடக்கம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வேணியின் காதலன் விட்டாள். பாவம். சூர்யாவைச் சுற்றி வீசிய சூறாவளி அதோடு நின்றதா? சொத்து சுகத்தை யெல்லாம் ஹைகோர்ட்டின் படிக்கட்டுகளைக் கடப்பதிலேயே அவள் அப்பா கழித்துவிட்டார். அது மட்டுமா ? குறுக்கு வழியிலே வந்த செல்வம் யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் குறுக்கு வழியாகவே சென்றுவிட்ட கவலையில் அவரும் மண்டையைப் போட்டுவிட்டார். அப்பாவை அடக்கம் செய்துவிட்டு, மறுநாளே சூர்யா நர்சிங் பள்ளியில் சேர்ந்தாள். அப்போதெல்லாம் அவள் அருமருந்தாம் கந்தனைச் சந்திக்கலாம்; கந்தர்வ லோகத் திலே உலவலாம் என்று கனவுகூட கண்டதில்லை. மனிதன் நினைப்பதைப் போலவா எல்லாம் நடக்கின்றன? கந்தன் ஆஸ்பத்திரிக்கு நினைவிழந்துதான் வந்தான். சூர்யாவின் நினைவிலே மீண்டும் புகுந்துகொண்டான். இந்த நேரத்திலேதானா தன் காதலுக்கோர் போட்டிக் காரியாக வேணி முளைக்கவேண்டும்? யார் இந்த வேணி? எப்படி அவள் கந்தனுக்கு மனைவியானாள்? என்பனவற்றை கேட்டறிய வேண்டுமென்று சூர்யாவுக்கு ஆசைதான். ஆனால் இவைகளை யெல்லாம் விசாரித்துத் தன் வேதனையை அதிகரித்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. தன் மென்தோள்களிலே துயில் கொண்ட கந்தனை வேறொரு பெண்ணாம் வேணி உரிமை கொண்டாடுவதா?- சூர்யாவால் வேணியின் காதல் போட்டியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ° ஆசைக் கனவுகளை புதுப்பித்துக் கொள்ள சூர்யாவுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஆமாம்... மருந்து மருந்து கொடுப்பதுபோல வேணிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடலாம்.... பின்னர் கந்தன் வேணியை மறந்து விடுவான்....இடத்தை பின்னர் சூர்யா பிடித்துக் கொள்ளலாம் அருமையான யோசனைதான்! சூர்யாவின் மென்மை இருதயமோ இந்தக் கோர நினைப்பால் நைந்துபோனது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணடக்கம்.pdf/29&oldid=1696727" இலிருந்து மீள்விக்கப்பட்டது