பக்கம்:கண்ணன் கருணை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27 கருமத்தில் நிற்பது நல்ல யோகம் தியாகத்திலும் பெரிய தவம் வேறில் லை வேள்வியில்லை தன்னம்பிக்கையற்று சாவது மூடத்தனம் தன்னைத்தானே கொன்று கொள்வது கோழைத்தனம் தம் நலத்துக்காக பிறரைக் கொல்வது மிருகத்தனம் தற் காப்பில் கலகத்தில் கொலைபுரிதல் மன்னிக்கத்தகும் நாள் குறித்து இடம்குறித்து களத்தில் நின்று தன்னிலும் வலியவரை தனக்கு நிகரானவரை கொல்லுவது கொலையல்ல வீரமென்று சொல்லுவார் புகழுக்கு உரியது கடமைக்கு உரியது சாத்திரம் தடுப்பதில்லை சரித்திரம் மறுப்பதில்லை இலக்கணம் வகுப்பது இலக்கியம் படைப்பது சிரித்த முகத்தோடு செந்தூரத் திலகமிட்டு சென்று வருக வென்று வருக என்றே வாழ்த்தி அனுப்புவாள் வாழ்க்கைத் துணைவி தீமையை அழிக்கச் சொல்லி நல்லோர் வாழ்த்துவர் நலத்துக்கு ஆன போர் தியாக வேள்வி தேவருக்கு உரிய ஓமத்தினும் பெரியது அறப்போர் அறப்போர் வாய்த்தது உனக்கே முடிவு தெரியும் முடிக்கவும் தெரியும் மூன்று குணத்துக்கு உரியவரும் இருக்கின்றார் முதற்குணத்து பீஷ்மனை தருமனே வணங்கிக்கொள் ஆற்றல் மிக்க ஆசார்ய துரோணர் அன்புக்கு இனிய நின்மகன் என்மருகன் அபிமன்யு கொடுத்து கொடுத்து கரம்சிவந்த கர்ணன் ஆண்மைக்கு வலிய அர்ச்சுனன் நீயும் இரண்டாம் குணத்தவர் இருக்கின்றீர் புகழுக்கென்றே துரியோதன துச்சாதன பீமர்கள் போர் போரென்ற வெறியொன்றே அறிவார் மூன்றாம் குணத்தவர் முடிவுக்கு வந்தவர் தடுப்பதற்கில்லை தருமம் பிழைக்க வேண்டும் கருமத்தின் விதி நடத்தும் வழி இதுவே கலக்கமும் தயக்கமும் இனி உனக்கு வேண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/28&oldid=1363438" இலிருந்து மீள்விக்கப்பட்டது