பக்கம்:கண்ணன் கருணை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29 கண்ணன் பாஞ்சாலியைப் பரிசாக நீ கொண்டு வந்தாய் தர்மம் சங்கடப்பட்டது. தாயும் சஞ்சலப்பட்டாள் தியானதத்தில் என்னை அழைத்தாள் தேற்றினேன் 'மூத்தவனுக்கு முந்தானை விரிக்கும் தலைவி இளையவனுக்குப் பிள்ளை பெற்றெடுப்பாள் பாஞ்சாலர் குலத்துப் பரம்பரைப் பழக்கம் தவறன்று நின்தனையர் ஐவருக்கும் அவள் பொதுவே" என்பதற்கு இசைந்தாள். எது வேண்டும் கேள் என்றேன்.கடலில் மிதக்கத் தெப்பத்திலிருக்க வேண்டும் தெய்வ நினைவோடிருக்க துக்கம் வேண்டும் அருளுக' என்றாள். அவள் துயரின் தொடர்கதை இன்றைய போராக மூண்டு நிற்கின்றதடா' காண்டீபன் 'சாரங்கனே நான் வென்ற சங்கரனே தளங்களிலே வில்வத்துக்கு என்ன தனி சிறப்போ' கண்ணன் சங்கரன் ஆலகாலம் உண்டான் நாகங்களே சங்கராபரணங்கள் விஷத்துக்கு முறிப்பு சிவத்துக்கு அர்ச்சனை வில்லாளனே வில்வம் அதனால் உயர்ந்ததடா'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/30&oldid=1363760" இலிருந்து மீள்விக்கப்பட்டது