பக்கம்:கண்ணன் கருணை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 காண்டீபன் "மகத்துவமே மருத்துவத்துக்கு தன்வந்திரி நீ என்றால் துளசி மகத்தானது எப்படியோ?” கண்ணன் "என்னைத் துதிப்பவர் தன்வினைக்குத் தவமிருப்பார் அவர் வினை அறுக்கும் போது அவர் நோயும் ஏற்பேன்" அடியவர் பிணிகளை அனுபவிக்கும் பொறுப்பெனக்கே திருத்துழாய் மாலையாகி மருந்தாகின்றதடா உண்ணுவது கண்ணன் உணவும் கண்ணன் என்பதை உணர்த்தவே அன்று கோகுலத்தில் வெண்ணெய் உண்ட வாயால் நானும் மண்ணை உண்டு காட்டினேன் என் வயிற்றில் அன்னை யசோதை அண்டங்களைக் கண்டாள்" காண்டீபன் "அனைத்தும் உன்னுள் ஒடுக்கம் என்றால் புண்ணியனே இந்தப் புண்ணாகும் போரெதற்கோ மண்ணாள வந்தோம் மனதாளவில்லை. உன்மத்தம் ஆகுதய்யா உண்மை என்னவோ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/31&oldid=1363764" இலிருந்து மீள்விக்கப்பட்டது