பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120◇ ராசீ



போய்விடும்; அதைவிட உன்னைக் கட்டிப்போட்டு விட்டால் பாரதப் போரே நிகழாது" என்று அழகாகக் கூறினான். கண்ணன்தான் பாரதப் போர் மூளுதற்கும், முடிதற்கும் காரணம் என்பதைச் சொல்லி முடித்தான். "நீ பாரத அமரில் யாவரையும் நீறுஆக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தாய், புயல்வண்ணா" என்று கூறுகிறான். பூபாரம் தீர்க்கும் கடமையைக் கண்ணனும் முடித்துவிட்டான். பாரதப்போருக்குப் பின்னும் பூசல்கள் நீண்டு கொண்டே இருந்தன. பலராமன் கட்சி, கண்ணன் கட்சி என்று இருவேறு கட்சிகள் உண்டாயின. யாதவர்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்துக் கொண்டிருந்தனர். கண்ணனால் அவரவர் அறிவின்மையால் அடித்துக் கொண்டு சாவதை நிறுத்த முடியவில்லை. அவர்களே தமக்கு எதிரிகளாக மாறிவிட்டனர். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் தங்களுக்குள் சண்டை யிட்டுக் கொண்டனர். மது, அருந்தி மதி கெட்டனர். "நான் சமைத்த அன்னம் சிறந்தது. நீ சமைத்தது தாழ்ந்தது" என்று சின்ன விஷயங்கள் பேசிச் சினம் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அவர்கள் தத்தம் ஆயுதங்களைக் கொண்டனர்; தாக்கி அவை எல்லாம் போதவில்லை என்று கடற்கரையில் கோரை முள் வடிவத்தில் மறைந்திருந்த உலக்கையை