பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122◇ ராசீ



தாருகனை அனுப்பி அருச்சுனனை அத்தினாபுரத்தி லிருந்து வரச்செய்தான். மேலும் தேவதூதுவனாகிய, வாயுதேவன் கண்ணனைச் சந்தித்துத் தேவர்கள் அவனை அழைப்பதாகக் கூறினான். "யாதவர்கள்ையும் இன்னும் ஏழு இரவுகளில் அழித்துவிட்டு இந்தத் துவாரகையைக் கடல் அரசனுக்கு ஒப்புவித்து விடுவேன். கடல்கோள் வந்து துவாரகையை அழித்துவிடும். பூபாரம் தீர்ந்து கடமை உணர்வோடு நான் திரும்புகிறேன்" என்று சொல்லி அவனை அனுப்பினான். கண்ணன் தன் கடமைகள் எல்லாம் முடிந்து விட்டன என்ற மனநிறைவோடு யோகநிலையில் தனித்து உலக பந்தங்களில் இருந்து விலகிப் பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட தன் சுய அதீதநிலையில் நின்று பரப்பிரம்ம மாக இருந்தான். அவ்வழி வந்த வேடன் அவன் திருவடிகளை மான் என நினைத்து அம்பு எய்தான். கோரை முள் முனை உடைய அம்பு ஆதலின் அது அவன் விடுதலைக்குத் துணை செய்தது. வந்து பார்த்தான். கண்ணன் கதறினான். - "நீ தவறு செய்யவில்லை. எனக்குப் பணி முடிந்து விட்டது. எனக்கு நீ இறுதி உதவி செய்தாய்" என்று அவனைத் தேற்றினான். அருச்சுனன் கண்ணனின் அழைப்பைக் கேட்டு ஓடோடி வந்தான்; கண்ணனுக்கும் பலராமனுக்கும் தன் கையால் ஈம எரியை ஊட்டினான். கண்ணனின் பத்தினியர் அனைவரும் கனலில் பாய்ந்து உயிர்விட்டனர். ரேவதியும் பலராமனோடு எரியில் எரிந்தாள். இச் செய்தியைக் கேட்ட உக்கிரசேனரும், வசுதேவரும், தேவகியும், ரோகிணியும் அக்கினிப்பிரவேசம் செய்தனர்.