பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇13



கூடை ஒன்றில் வசுதேவன் குழந்தையைச் சுமந்தான்; தெய்வம் உரைத்தபடி யமுனையைக் கடந்தான். வெள்ள மாய் ஒடிய யமுனை சிறு பள்ளமாய் அவனுக்கு வழி விட்டது; ஆதிசேடன் ஐந்தலை நாகமாய் வந்து அவனுக்குக் குடை பிடித்தான். கோகுலம் சேர்ந்தான்; வியாகுலம் தீர்ந்தான்.

 யசோதைக்கு அடுத்த திதி நவமியில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதை வசுதேவன் மாற்றி எடுத்துக் கண்ணன் சிறைக் கட்டிலில் விட்டுவைத்தான். மறுபடியும் தேவகி முன்னால் புதிய குழந்தை புனர்ஜன்மம் எடுத்தது. தேவகிக்குத் தெரியும் இது சாகப் பிறந்த குழந்தை என்று. அழுகை ஒலியால் தன் வருகையை அது அறிவித்தது. தொழுத கையோடு சென்று காவலர் செய்தி செப்பினர். உருவிய வாளுடன் வெருவிய கம்சன் அங்கு மருவினான்; கருவிய குழந்தையைக் கையில் எடுத்தான்.
 பெண் என்பதனைச் சென்றபின் அறிந்தான். ஆண் ஆனால் என்ன? பெண் ஆனால் என்ன? எட்டாவது என்ற முத்திரை தாங்கி இருந்தது. எடுத்தான்; எறிந்தான் ஒரு பாறை மீது அதனை; பெண் கொலை செய்து கைகளைக் கறைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. கல்லில் பட்டுச் சுக்கு நூறாகச் சிதைந்து விண்ணின் மீது நிறைந்து அவன் கண்களுக்குத் துர்க்கையாய்க் காட்சி தந்தது. "துஷ்டனே! உன் இஷ்டமாக எதுவும் நடக்காது; உன்னைக் கொல்ல வந்தவன் வேறு ஓர் களத்தில் கொலுவீற்றிருக்கிறான்; நான் அவன் நிழல்; மாயை, என்னை நீ கொல்ல முடியாது" என்று எழில் வானில் இருந்து மொழி பேசியது.
 நந்த கோபனுக்கு நீண்ட காலமாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. அதுவே அவனுக்குக் கவலையாகவும் இருந்தது; மகள் பிறப்பாள் என்று சோதிடர்கள் ஒதிக் கொண்டு இருந்தனர். அந்த நம்பிக்கை தவறு என்று சுட்டிக்