பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16◇ ராசீ்



நாரதர் இட்ட சாபம்

நளகூவரன் மணிக்கிரீவன் இருவரும் அளகை நகர்க் காவலனின் அருமை மைந்தர்கள்; செல்வம் அவர்களைச் செருக்கில் ஆழ்த்தியது. கிறுக்குப் பிடித்தவர்கள்; மதுவின் மயக்கிற்கு உள்ளாயினர்; மாதர்களின் மதர்ப்புக்கு அகப்பட்டவராகி நீரில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். -

நாரதர் அவ்வழிப் போக்கர்; பார்த்தும் பாராமலும் போய் இருக்கலாம்; பெண்கள் குளிப்பதால் இவர் கண்கள் அந்தப் பக்கம் திரும்பின. கரை ஏறிய பெண்கள் அவரைக் கண்டதும் தம் பெண்மையை மறைத்துக் கொண்டனர்; இவர்கள் மட்டும் அவர் தந்தை பிரமன் இப்படித் தான் தம்மைப் படைத்து இருக்கிறார் என்பதை நெடுமரமாய் நின்று காட்டிக்கொண்டனர்.

அது அவர்கள் தன்னை அவமதித்ததாக எடுத்துக் கொண்டார். அந்தக் காலத்திலே முனிவர்களுக்குக் கோபம் வந்தாலே சாப்ம் இடுவது வழக்கமாய் இருந்தது. இவரும் அவர்களைக் "கோகுலத்தில் மருத மரங்கள் ஆவீராக" என்று சாபமிட்டார். கதை என்றால் அதற்கு ஒரு முடிவு தேவை; சாபம் என்றால் அதற்கு ஒரு விமோசனமும் தர வேண்டும்; அதுதான் இது, கண்ணன் நிழல் பட்டதும், நாரதன் இட்ட சாபம் தீர்ந்து மரங்களாக நின்றவர்கள் தேவர்களாக மாறித் தம் சொந்த நகருக்குத் திரும்பினர்.

பிருந்தாவனம் எழுதல்

"உக்கிரன்தான் ஆட்சியில் இருந்தவரை நாட்டில் அக்கிரமங்கள் நடக்கவில்லை. அவன் மகன் அவன் தந்தையைப் பதவியில் இறக்கிவிட்டுத் தான் உட்கார்ந்து விட்டான். அது முதல்தான் இந்த அவதிகள்" என்று கோகுலத்தில் பேசிக் கொண்டனர்.