பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇33



அமைத்துக் கொடுத்தான்; கண்ணன் முதலில் வெளியே வந்தான். மற்றவர்கள் தொடர் கதை ஆயினர். அந்த வெடி விபத்தில் மலைப்பாம்பு தலை சிதறி நிலைகெட்டு உயிர் விட்டது. "ஆகா! அகாசூரன் அழிந்தான்" என்று தேவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

பிரமன் பார்த்தான்; அவனுக்கே ஒரு பொறாமை உண்டாகிவிட்டது. "மூலையில் உட்கார்ந்துகொண்டு வேதம் படித்துக்கொண்டிருக்கிறோம்; நம் நாதம் இந்த உலகத்துக்கு எட்டவில்லை; கண்ணனுக்கு ஓர் ஏதம் உண்டாக்கிப் பார்ப்போம்; அவன் என்ன செய்கிறான் தெரிந்து கொள்ளலாம்" என்று எண்ணத் தொடங்கினான்.

"கலியாணச் சந்தடியில் முகம் பார்க்கும் கண்ணாடியும் சீப்பும் ஒளித்து வைத்துவிட்டால் கலியாணம் நின்று போய்விடும்; திண்டாட வேண்டியது தான்" என்ற மனப்போக்குக்கேற்ப இந்தக் கன்றுகளையும் இடைச் சிறுவர்களையும் கடத்திச் சென்று விட்டால், இவன் எப்படி அவர்களை நடத்திச் செல்ல முடியும்? பார்க்கலாம் ஒரு கை என்று கடத்தல் தொழிலுக்கு அவன் முதல் வழிகாட்டியாகச் செயல்பட்டான்.

மலைச்சாரலுக்கு அப்பால் கன்றுகளை ஆயர்கள் தொடர்ந்து துணிந்து மேயவிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை அப்படியே திசை திருப்பித் தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டான். கண்ணனின் கண்களுக்குப் புலப்படாமல் செய்து விட்டான்.

கதிரவன் கால் சாய்ந்தான்; மங்கிய அந்தி நேரம்; கண்ணனும், பலராமனும் தம் தோழர்கள் வருவார்கள் என்று எதிர் நோக்கினர். அதிர்ச்சியை அடைந்தனர் அவர்கள் இறங்கி வராமையால்.

எப்படி வீட்டுக்குத் திரும்புவது என்ற வினாவுக்கு விடை தேடினர். குமுதப் போட்டிக்கு விடை காண்பது