பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇69



விதர்ப்ப தேசத்தில் குண்டினபுரி என்னும் நகரில் பீஷ்மகன் என்பவன் அரசனாய் இருந்தான். அவனுக்கு உருக்குமி என்ற மகன் ஒருவனும், உருக்குமணி என்ற மகள் ஒருத்தியும் இருந்தனர். உருக்குமிக்குத் தம்பியர் சிலரும் இருந்தனர். அவர்கள் மிகவும் அடக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். உருக்குமியே மூத்தவன்; அவன் இட்டதுதான் சட்டமாய் இருந்தது.

உருக்குமணியின் பேரழகைச் சாதுக்கள் பலர் வந்து கண்ணனுக்கு உரைத்தனர். அவ்வாறே அவளிடம் சென்று இவன் பெருமையை உரைத்தனர். உருக்குமணியின் பெயரைக் கேட்டதும் கண்ணனுக்குப் பழகிய பெயராக இருந்தது; ஒரே கதைக் கருவைப் புதுப்புது வடிவில் காண்பதாய் அவனுக்குத் தெரிந்தது.

பழைய கள்ளே போதை தருவதாகும் என்பது அவனது அனுபவமாய் இருந்தது. வேலை வெட்டி இல்லாமல் வேட்டியை மாற்றி மாற்றிக் கட்டிக்கொண்டு வீட்டில் காலம் தள்ளிய நேரம் அது. சராசந்தனோ அவனைச் சார்ந்த நண்பர்களோ அவன் கதவைத் தட்ட வில்லை. அதனால், அவள் நினைவுகள் அவனைத் தட்டி எழுப்பிக் கொண்டு இருந்தன.

சிசுபாலன் சராசந்தனின் நண்பன்; கண்ணன் அவளை மணக்கக் கூடாது என்பதற்காக அவன் ஒருபடி இறங்கிக் கீழே வந்தான். அவனுக்கு அவள் ஏற்ற மனைவி ஆக முடியாது; அவள் பத்தாம்பசலி என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அவள்மீது கண்ணனின் கை படக் கூடாது என்பதில் கருத்தைச் செலுத்தினான் அவன். தான் ஒர் அரசன் மகன் என்பதில் அகம்பாவம் காட்டினான். அரசர் குடியில் பிறந்த உருக்குமணி இடையன் ஒருவனை