பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 «> Tाd விட்டான்; இவன் சென்ற பிறவியில் மன்மதனாக இருந்தான். நீ அந்தப் பிறவியில் ரதியாக இருந்தாய், நீ இவனை வளர்த்து உன் காதல் மணாளனாய் ஆக்கிக் கொள்" என்று சொல்லிவிட்டுப் போனார். அவனை எடுத்து அவள் அன்புடன் வளர்த்து வந்தாள்; அவன் பேரழகில் தன் மனத்தைப் பறி கொடுத்தாள். அவனுக்குத் தான் கற்றிருந்த மாய வித்தைகளை எல்லாம் கற்றுத் தந்தாள். அவனைத் தன் காதலனாகவே பார்த்து வந்தாள். பிரத்தியும்நனுக்கு ஐயம் தோன்றியது; "நீ தாய்போல் என்னை வளர்த்து வந்தாய்; நான் உனக்குச் சேய் ஆவேன்; . என்னை நீ காமவேட்கை கொண்டு அணுகுகிறாயே! ஏன்?" என்று வினவினான். "நீ கண்ணனின் திருமகன்; ஆறாம் நாளிலேயே உன்னைச் சம்பரன் கொண்டுவந்து கடலில் போட்டு விட்டான்; மீன் ஒன்று உன்னை விழுங்கி விட்டது, அஃது இங்கே சேர்க்கப்பட்டது. நீ சென்ற பிறவியில் மன்மதன். நான் ரதி. இந்தச் செய்தியை நாரதர் சொல்ல நான் தெரிந்து கொண்டேன். நீயும் நானும் காதலர்கள். இந்தச் சம்பரன் வற்புறுத்தி என்னை அடைய இங்கே கொண்டு வந்துவிட்டான்; அவனை மயக்கிக் கொண்டு ஏமாற்றித் தப்பித்து வருகிறேன். நீ அவனை நான் கற்றுத் தந்த மாய வித்தைகளின் துணையால் போர் செய்து கொன்றுவிடு; நாம் இருவரும் இங்கிருந்து வெளியேறி விடலாம்" என்று கூறினாள். பிரத்தியும்னன் சம்பரனைப் போருக்கு அழைத்து, அவன் சேனைகளையும், அவனையும் தன் பேராற்றலாலும்