பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇83



பட்டனர். அக்குருவர்; கிருதவர்மன், சததனுவன் ஆகியவர்கள் தமக்கு மணம் முடிக்கக் கேட்டுக் கொண்டிருந்தனர். கண்ணனே மாவீரன் என்பதை அறிந்து அவனுக்குத் தன் மகள் சத்தியபாமையை மணம்செய்து கொடுத்தான். மணியையும் கண்ணனுக்கே சீதனமாகக் கொடுத்தான். கண்ணன் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. மணிக்காகவே அந்தப் பெண்மணியை மணந்தான் என்று உலகம் பேசும்; அந்த நிந்தனைக்கு அவன் ஆளாக விரும்பவில்லை. "நீயே வைத்துக்கொள்; உனக்கு நன்மை உண்டாகட்டும். அதை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்க" என்று சொல்லித் திருப்பித் தந்துவிட்டான். இம் மூவரில் கிருதவர்மன் சத்தியபாமையைப் பெறாமையால் மனம் வெதும்பினான்; மணியைப் பெறாமையால் மற்றைய இருவருக்கும் சத்திரஜித்துவின் பேரில் கடுங்கோபம் எழுந்தது. மூவரும் ஒருங்கு கூடிப் பேசினர். - - அக்குருவரும், கிருதவர்மனும் மற்றவனைப் பார்த்து இவ்வாறு கூறினர்: "பாமையை நாம் பெற முடியவில்லை. மணியையாவது நீ பெற்றுக் கொள்; நம்மை ஏமாற்றி இழுக்கடித்து மகளை வேற்று ஆளுக்குத் தந்த சத்திரஜித்துவைக் கொன்றுவிடு; அந்த மணியை நீயே எடுத்துக்கொள்; நம் மூவரில் யாராவது ஒருவர் அதை அடைவதுதான் தகுதி" என்று கூறினர். "கண்ணன் உன்னை எதிர்க்கத் துணியான்; அப்படி எதிர்த்தால் நாங்கள் துணைக்கு வருகிறோம்; அஞ்ச