பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84◇ ராசீ



வேண்டாம்” என்று அவனை ஊக்குவித்தனர். அவர்கள் பேச்சைக்கேட்டுச் சத்தனுவன் சத்திரஜித்து தூங்கிக் கொண்டிருக்கையில் தன் வாளால் அவனைக் கொன்று விட்டு அம் மணியைக் கவர்ந்து கொண்டான்.

வீரனாக வாழ வேண்டிய சத்தனுவன் மணிக்காகக் கொலையையும் செய்தான்; திருடவும் செய்தான். இவன் செய்கை மிகவும் கொடுமை. தந்தையை இழந்த மகள் சத்தியபாமை அத்தினாபுரத்தில் அச்சமயம் பாண்டவர் அரசியல் காரணமாகத் தங்கியிருந்த கண்ணனுக்குச் செய்தி தெவிவித்தாள். கண்ணனும் பலராமனும் விரைந்து துவாரகைக்குத் திரும்பினர்.

கொன்றவனைப் பழிவாங்க வேண்டும் என்பது ஒன்று; விலைமிக்க அம் மணியைத் திரும்பப் பெற வேண்டும் என்பது மற்றொன்று. சத்தியபாமையின் கண்ணிரைத் துடைக்க வேண்டும். அவள் மனம் குளிர அவனை முடிக்க வேண்டும். கண்ணனும் பலராமனும் அவன் இருக்கும் இடம் தேடிப் படையொடு சென்றனர்.

இச் செய்தி அறிந்த சத்தனுவன் தன் நண்பர்களிடம் ஓடினான்; அவர்கள் துணையை நாடினான். அவர்கள் இருவரும் கை விரித்துவிட்டனர். கண்ணனை எதிர்க்கும் ஆற்றல் தமக்கு இல்லை என்று தெரிவித்தனர்.

நம்பிக்கைத் துரோகம் இழைத்த போதிலும், அவன் அவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் தம் இயலாமையையே தெரிவித்தனர்; தனித்து அவர்கள் இருவரையும் எதிர்க்க முடியாது என்று நினைத்து உயிர் தப்ப ஓடினான். போகுமுன் ஒப்பு உயர்வு அற்ற அந்த மாமணியை