பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vííí நூற்றாண்டுகட்குப்பின், இவர் பாடல்களைத் தமிழ் நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன். இந்நூல் வாழ்க! என்னவர் வாழ்க! எந்தாய் வாழ்க!!!” இது கண்ணன் பாட்டுக்கு நெல்லையப்ப பிள்ளை எழுதிய முகவுரையின் பகுதி. பிள்ளையவர்களின் உபநிடத உண்மை போன்ற கூற்றின் உண்மையை இன்று நாம் காண்கின்றோம், கண்ணன் பாட்டில் தெய்விகப் புலவர் காட்சி தருகின்றார். ஜீவன் முக்தராகத் திகழ்ந்த கவிஞர் தென்படுகின்றார். இவரைத் தமிழ் நாட்டின் தவப் பயனாகக் காண்கின்றோம்; உணர்கின்றோம். கண்ணன் பாட்டு வாழ்கின்றது. இறவாத புகழுடைய புதுநூலாக’ வாழ்கின்றது. அதனை இயற்றிய என்னவர் வாழ்கின் றார். கவிஞரின் பெயரால் தமிழக அரசு எடுத்த பல்கலைக் கழகம் கவிஞரின் புகழுடம்பாகத் திகழ்கின்றது. அதில் * எந்தாயும் வாழ்கின்றாள்; புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்டேன்' என்ற கவிஞரின் கூற்று உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை. இந்நூல் வெளிவரும் "பேறு கிட்டுமோ என்ற ஐயம் முளைவிட்டது. கண்ணன் அருளால் சர்வோதயம் உதய மாயிற்று. சர்வோதய இலக்கியப் பண்ணை என் கைப்படியை அன்புடன் ஏற்று வெளியிட்டது. இந்நிறுவனத் தின் அன்பைப் போற்றுகின்றேன்; நிறுவனத்தாருக்கு என் அன்புகலந்த நன்றியைப் புலப்படுத்திக்கொள்கின்றேன். இந்நூலை அழகுற அச்சிட்டும், மேலுறையைக் கண்கவர் வனப்புடனும் பக்தியுடனும் அச்சிட்டும் 翌 2. முதற் பதிப்பின் முகவுரை.