பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்- என் அரசன் 87 என்று கூறுவர். பல்வேறு உறவு முறைகளைக் கூறும் ஆழ்வார் "எனக்கு அரசு - என்னை ஆண்டவன்" என்று மொழிவதைக் காணலாம். இன்னும் இந்த ஆழ்வார் எம் பெருமானை எங்கள் எம் இறை" என்றும், எவ்வம் தோப் தீர்ப்பான் எமக்கிறை" என்றும் குறிப்பிட்டுள்ளமை சிந்திக்கத் தக்கது. 'கண்ணன்-என் அரசன் என்ற பாடலில் பாரதியார் இதிகாசக் கண்ணனைக் காட்டி அவன் தனக்குச் செய்த தற்செயல்களை எண்ணிக் கணிக்கின்றார். ஆயினும் அவன் நல்லவர்களை திராவகச் சோதனைக்கு" (Acid test) உட்படுத்துவதையும், 'தெய்வம் இல்லையோ?" என்று மனம் வருத்தி தைந்து போகும் நிலைக்கு அவர்கள் தள்ளப் படுவதையும் சுட்டிக் காட்டவே செய்கின்றார் எடுத்த எடுப்பில், பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும் பார்த்திருப்ப தல்லா வொன்றுஞ் செய்திடான் நகைபு ரிந்து பொறுத்துப் பொறுத்தையோ நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். என்று இக்கருத்தினைச் சுட்டும் பாங்கிலேயே கவிதை தொடங்குகின்றது. அடியார்கள், நல்லவர்கள் இவரிகள் மனம் நைந்து போவதை, கண்ணன் வென்று பகைமை பழிந்துநாம் கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே; எண்ணமிட் டெண்ண மிட்டுச் சவித்துநாம் இழந்த நாட்கள் புகமெனப் போகுமே. என்ற பகுதியால் அறியலாம், கண்ணன்,பாண்டவர்களின் பக்கத் துணையாகத்தான் இருந்தான். இருப்பினும், 3. மேலது. 9. 10: 1 4. மேலது 9, 10: 2