பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-ன்ை அரசன் 器剑 தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். இவை மட்டுமா? துன்பப் படுங்கால், காலினைக் கையினால் பற்றிக் கொண்டுநாம் கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால் நாவிலொன்று பலித்திடுங் காணென்பன்; நாமச் சொல்லின் பொருளெங் குனர்வதே? ஆண்டவன் என்று நினைத்து அவனை அணுகும்போது ஆவனே தத்துவம் பேசினால் அதற்குமேல் மேல் வழக்கு" ஏது: தெய்வநியதிகள் என்று சில உண்டு. அவற்றின்படி செயல்கள் நடைபெறும். அவை விளங்காப் புதிர்களாகவே இருக்கும். நம்மால் அவற்றை விளங்கிக் கொள்ளவே முடியாது. மெய்விளக்க அறிஞர்களும் சமயச் சான்றோர் களும் கூறுபவை ஒன்றுபோல் இராது. வள்ளுவப் பெருந் தகை இதன்ை ஊழ் என்று குறிப்பர். இதனால்தான், 'நாலிலொன்று பலித்திடுங்காண்? என்று கண்ணனே உரைப்பதாகக் கவிஞர் கூறுகின்றார். எப்படியிருப்பினும் "நாம் அவன் வலியினை நம்பிதான் இருக்கின்றோம். நம்பினோர் கெடுவ தில்லை: நான்கு மறைத் தீர்ப்பு: அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்." என்று கவிஞரே சொல்லியுள்ளதை நிைைவுகூர்கின்றோம். அடுத்து, கண்ணனாகிய அரசனின் பண்புகளைக் காட்டுவார். கண்ணன் தீமைகளை விலக்குவான். சிறுமையை ஒளிந்தோடச் செய்து விடுவான் என்று கூறும் கவிஞர் மேலும் கூறுவார்: 5. தோ, பா.-41தேசமுத்துமாரி - 7