பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் அரசன் 9 : குறை கூறினான். கண்ணனும், நண்பனே, அம்முறை மிக துணுக்கமுடையது. உன்னால் அதனைக் கற்றுக் கொள்ள முடியாது’ என்று உரைத்தான். இதனைக் கேட்ட மாலிகன் ‘என்னால் முடியதாதுகூட ஒன்று உண்டோ? நீ அவசியம் அம் முறையை எனக்குக் கற்றுத்தருதல் வேண்டும் என வற்புறுத்தினான். கண்ணனும் இதுதான் தக்க சமயம்’ என்று திருவுளங்கொண்டு திருவாழியை எடுத்துத் தன் ஒற்றை விரலால் சுழற்றி மேலெறிந்து கையிலேற்றிக் காட்டினான். உடனே மாலிகனும் இது எனக்கு அரிதோ' என்று கூறி அப்படையை வாங்கிச் சுழற்றி எறிந்து பிடிப்பதாக நினைத்துத் தன் கைவிரலைக் கழுத்துக்கு அடுத்து வைத்து நிற்க, அச்சக்கரப்படை சுழன்று வருவதற்கு இடம் போதாமையால் அதன் வீச்சு இவன் கையில் பிடிபடாமல் இவன் தலையை அரிந்துவிட்டது. ஒழிந்தான் சீமாலிகன். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். சிறுவயது முதற்கொண்டே அவன் புரிந்த விக்கிரமங்கள்’ எல்லாம் எண்ணற்றவை. இவற்றையெல்லாம் நினைந்த வண்ணம் கவிஞர் கூறுவார் : வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்து போகப் பகைமை பொசுக்குவான்; பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். மாபாரதம் தீர்த்து வைத்த வரலாறே ஒரு ப்ெரிய சான்றாக நிற்கின்றது. "போரில் படைஎடேன்’ என்று வாக்களித்தவன், சொன்னதைத் திருப்பி வேறு விதமாகப் பேசும் வழக்கறிஞர்போல் சாமரித்தியமாகப் படையை ஏவிப் பகலவனை மறைத்துப் பார்த்தனால் சயத்திரதனை முடித்த வரலாறு அற்புதம், அற்புதம், இதை நினைந்த கவிஞர் பெருமான்,