பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் அரசன் §§ என்று அவt வாக்கினாலேயே இதனைத் தெளியலாம். சித்தர்களைப் போலவே இவரும், மொய்க்கும் கவலைப் பகைபோக்கி முன்னோன் அருளைத் துணையாக்கி, எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இரும்புக் கிணையாக்கி பொய்க்கும் கலியை நான்கொன்று பூலோ கத்தார் கண்முன்னே மொய்க்குங் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதியிஃதே." என்று சொல்லுவார். நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்கள், என்சொலால் யான்சொன்ன இன்கவி என்பித்து, தன்சொலால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்." 捡 -> என்று எம்பெருமானே தன்னுள்ளிருந்து பாடுகின்றான் என்று சொல்வதுபோலவே பாரதியாரும், செய்யும் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்." என்று கூறுவார். நமக்குத் தொழில் கவிதை என்று கூறியவர் அது பராசக்தியாலே செயப்படுகின்றது என்று கூறும்போது பராசக்தியின்மீது அவர் கொண்டிருந்த ஊற்றம் தெளிவாகின்றது. 8. தோ. பா.-விநாயகர் நான்மணி மாலை - 89 9. திருவாய் 7.9 : 2 10. தோ. பா.-விநாயகர் நான்மணி மாலை . 26.