பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-10 கண்ணன்-என் குருவும் சீடனும் கண்ணனைச் சற்குருவாகவும் சீடனாகவும் கொண்ட பாரதியாவின் கருத்தை ஆய்வதற்கு முன்னர் வைணவர் கண்டையே நிலவி வரும் ஓர் இதிகாசத்தை நினைவுகூர்வது போத்தமாகும். வைணவ சமயத்தின் மூல மந்திரமாக இருப்பது திருகத்திரம். இது தன்னை செபிக்கின்றவர் ※ கட்கு இரட்சகமாயிருத்தலின் மத்திரம் என்ற திருநாமதி தைப் பெற்றது. முன் ஒரு காலத்தில் சமுசாரிகள் & பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தலாகிய தங்கள் நிலை யையும், இக்கனை ஒரு காரணமுமின்றி ஆட்கொள்பவ னாகிய காைதுடைய தன்மையையும் மதத்தனவர். இதனால் அடிமைத் தொழிலாகிய தங்கள் சிறந்த பலனை யும் இழத்தனர். இத்த இழப்பைப் பற்றிச் சிறிதும் சிந்தனை வின் றிச் சமுசாரமாகிய பெருங்கடலில் விழுந்து பல்வேறு துன்பங்களால் உழன்றனர் இந் நிலையை கானப் பொறுக்கமுடியாத தாவும் தந்தையுமான எம்பெருமான், தங்களையும் (ஆன்ம சோரூபம்) அறிந்து தன்னையும் (பரமான்ய சொரூபம் அறிந்து, தானாகிய மரக் கலத்தைக் கொண்டு தங்கள் பிறவிப் பெருங்கடலைக் கடந்து வீடுபேறாகிய கரையை அடைவதற்கேற்ற அறிவைப் பெறும் வழியைச் சிந்தித்தான். இந்தச் சிந்தனையின் விளைவாக எம்பெருமான் தானே சீடனும்