பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் குருவும் சீடனும் 95 ஆசாரியனுமாக நின்று அநாதியானதும் அரித்த கஞ்சக ஞானத்தைச் சுருக்கமாகத் தெ ரி வி ப் பது ம | ன திருமந்திரத்தை வெளியிட்டருளினான். சீடனுடைய இலக்கணங்களை உலகினர் நன்கு அறிந்து கொள்ளாமை பின் இவற்றைத் தன் செயல்களினால்(learning by doing) அறிவித்தற் பொருட்டே தான் சீடனாய் நின்றான். இதுதான் வரலாறு : சத்திய யுகத்தில் பதரிகாசிரமத் தில் தர்மதேவனுக்கும் தட்சப் பிரஜாபதியின் மகளாகிய மூர்த்திதேவிக்கும் இருவர் நான், நாராயணன் என்ற பெயர்களுடன் விஷ்ணுவின் அவதாரங்களாகப் பிறந்த னர். இவர்தம் குழந்தைப் பருவம் நைமிசாரண்யத்தில் கழிந்தது; கந்தமாதன பருவதத்தில் இவர்தம் தவ வாழ்க்கை தொடங்கியது. பின்னர் தேவர்கள் முனிவர் கள் மக்கள் இவர்கட்குக் குரு-சிஷ்ய முறையை நன்கு விளக்கும் பொருட்டுப் பதரிகாசிரமத்திற்கு வந்தனர், நாராயணன் நானுக்குத் திருமந்திரத்தை உபதேசித் தருளினன். இந்த வரலாற்றை பிள்ளை உலக ஆசிரியர் அருளியுள்ள முமூட்சுப்படி என்ற நூலும் குறிப்பிடு கின்றது." குருவை காடுதல் : வாழ்க்கை உண்மைகளை நாடும் கவிஞர் சாத்திரங்கள் பலவற்றைத் தேடுகின்றார். அங்கு ஐயம் இல்லாதனவும் ஐயத்தை எழுப்புவதைக் காண்கின்றார். இவற்றை அவர் கோத்திரங்கள் சொல்லும் மூடர் கூற்றாகக் கருதுவதால் அவற்றில் உண்மைகள் எப்படிக் கிடைக்கும்? எந்தவகையிலேனும் சகமாயை' யைக்கண்டறிதல் வேண்டும் என்று துடிக்கின்றார். நாடு முழுதும் சுற்றி அலைகின்றவர் இறுதியில் யமுனைக் கரையில் கிழவர் ஒருவரைக் காண்கின்றார். அவரிடம் 1. முமுட்சுப் படி-5, 6.