பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் குருவும் சீடனும் g? மேலும் கூறுவார் : "ஆதித் தனிப் பொருள் கடல் போன்றது. அதில் தோன்றும் குமிழிகளே உயிர்களாகும். அறிவென்னும் ஞாயிறு தோன்றுகின்றது. அதனைச் சூழ்ந்த கதிர்கள் எல்லாம் உயிர்களாகும். இவற்றைத் தவிர ஏனைய பொருள்கள் யாவும் அதன் மேனியில் தோன்றும் வண்ணங்களாகும். இந்த உண்மையை அறிந்தே-எய்தியே-மக்கள் நேரிமையான தொழிலில் இயங்குகின்றனர். இந்த மக்கள் சித்தத்தில் சிவத்தைக் காண்கின்றனர். களிப்புடன் உலகத்தை ஆளுகின்றனர். களிறு போன்று பீடுநடை போட்டுக் களிப்புடன் எங்கும் திரிகின்றனர். இங்கு நித்தம் நிகழ்வன அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம்: கத்த சுகம்: தனி ஆனந்தம்’ எனச் சூழ்ந்து கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர்.” இன்னும் கூறுவார் : "அறிவில் ஒளி துலங்குகின்றது; மதியில் சூழ்ச்சித் திறம் பிறக்கின்றது. நீதி வழுவாமல் எந்த நேரமும் பூமியில் தொழில் செய்கின்றனர்; கலைத் திறம் கண்டு பொருளியல் காண்கின்றனர். பெண்மை மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில் இன்பத்தால் எற்றுண்டு மகிழ்வெய்துகின்றனர். இவரிகள் ஆடுதல், காடுதல், ஒவியம், கவிதை ஆகிய கலைகளில் ஈடுபட்டுத் திளைக்கின்றனர். தாம் நாடும் பொருள்கள் அனைத்தை யும் சில நாள்களில் எய்தப்பெறுகின்றனர். இவர்கள் காட்டில் வாழ்ந்தாலும், புதர்களில் குடியிருந்தாலும் தாம் வாழும் இடத்தைத் தெய்வக் காவனம்’ என்றே கருது கின்றனர்.” இங்ஙனம் உபதேசம் செய்த கண்ணன், 2. பாரதியாருக்கு சிவன், நாராயணன், சக்தி எல்லாம் ஒன்றுதான். க. பா. -?