பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் குருவும் சீடனும் இயல்-7 இல் அற்புதரசம்பற்றிய விளக்கம் தரப் பெற்றுள்ளது. இயல்-5 இல் க்தி என்பது இலக்கணப் படி ஒரு ரசம் அன்து என்றும், பக்திச் சுவை” என்று சொல்லுவது ஒரு வித உபசாரமே என்றும், அது சிருங்காரத்தில் அடங்கும் என்றும் விளக்கப்பெற்றுள்ளது. இவற்றை ஆண்டுக் கண்டு தெளிக. சீடனைக் காலுதல் : கண்ணனே கவிஞரிடம் சீடனாக வருகின்றான். யானே யாகி என்னவாற் பிறவாய் யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய் யாதோ பொருளாய் மாயக் கண்ணன் என்று முதலிலேயே தத்துவ ரூபமாகக் கண்ணனைக் காட்டுகின்றார். கவிஞர், எல்லாம் வல்ல இறைவன் ஆன்மாவிலும் உள்ளான்; ஆன்மாவிற்குப் புறத்திலும் உள்ளான்; சித்திலும் அசித்திலும் கலந்தும் உள்ளான்; அவற்றில் கலக்காமல் தனியாகவும் உள்ளான். இது தத்துவக் கருத்து. அனைத்தும் நீ அனைத்துப் பொருளும் நீ" என்ற பரிபாடற் கருத்தையும், அவை அவை தொறும். கரந்தெங்கும் பரந்துனன்? என்ற திருவாய்மொழிக் கருத்தையும் ஒட்டி அமைந்தது போல் தோன்றுகின்றது. இந்நூல் பக்கம் 68 - 69 5. இந்நூல் பக்கம் - 47. 6. பரிபாடல் - 3 அடி - 8ே. 7. திருவாய். 1.1 : ?